adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

கும்பம்:

ராசியிலேயே சனி, சுக்கிரன் இணைவது இநத மாதம் எதைச் செய்தாலும் கும்பத்தைக்  காப்பாற்றும் கிரக அமைப்பு. மாதத்தின் பிற்பாதி நாட்கள் உங்களுக்கு எதிலும் சிக்கல்கள் இருக்காது. குறிப்பாக கடன் தொல்லைகள் இருக்காது. பணவரவு இருக்கும். பிரச்னைகளை சமாளிப்பீர்கள். முற்பகுதியிலும், பின்னாலும் இருவேறு எதிர் கிரக நிலைகளை கொண்ட மாதம் இது என்பதால் அனைத்திலும் நன்மைகளும் தீமைகளும் கலந்து நடக்கும். என்ன இருந்தாலும் ராசிநாதன் வலிமையாக இருப்பதால் எதையும் சமாளித்தும், ஜெயித்தும் காட்டுவீர்கள். ஏடிஏம்மில் பணம் நிரப்புவது போன்று பெரியஅளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள், பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. பருவ வயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். சுக்கிரனின் பலம் நல்லவைகளைத் தரும்.


பெரும்பாலான இளைய பருவ கும்பத்தினர் எதிலும் காலூன்ற முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இளைஞர்கள் ஏழரைச்சனி காலத்தில்தான் கஷ்டங்களை அனுபவிப்பீர்கள் என்பதால் காதல், கீதல் என்று உங்கள் சக்தியை விரயம் செய்யாமல் படிப்பிலும், வேலையிலும் கவனத்தை செலுத்துவது நல்லது. ஒருசிலர் எதிர்மறை பலன்களை சந்தித்து குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். மன அழுத்தத்திலும் சிலர் இருப்பீர்கள்.

யாரையும் நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். மாதத்தின் முதல்பாதியை விட பின்பாதியில் அதிர்ஷ்டகரமான நிகழ்வுகளும் மனம் சந்தோஷப்படும் காரியங்களும் இருக்கும். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள்  விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். சகோதரிகளால் செலவு உண்டு. அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். பிறப்பு ஜாதகப்படி வலுவில்லாத தசா புக்தி அமைப்புகளைக் கொண்ட இளைஞர்களுக்கு வேதனை தரும் விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சனிக்குப் பரிகாரமாக பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மைகளை தரும்.

4,6,7,8,12,14,15,24,26,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 24 -ம் தேதி பகல் 2.20 மணி முதல் 27-ம் தேதி அதிகாலை 2.56 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எவருடனும் வீண் பேச்சுக்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் கோபமும், எரிச்சலும் கலந்த உணர்வுகளில் இருப்பீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537