adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மகரம்:

ராசியில் செவ்வாய், இரண்டில் சனி இருப்பதால் எதிலும் தடைகள் உள்ள மாதம் இது. குறிப்பாக எதிர்பார்த்த சில விஷயங்கள் நடக்காமல் எரிச்சல் படுவீர்கள். பண விஷயத்தில் நினைப்பது நடக்காது. மகர ராசிக்கு முக்கால்வாசி ஏழரைச் சனி முடிந்து விட்டது. ஆயினும் உங்களில் சிலருக்கு வேலை, தொழில் விஷயங்களில் நல்ல பலன்கள் இல்லை. அதேநேரத்தில் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு போதுமான பலன் இறைவனின் அருளால் கிடைக்கும். பாக்கிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் அவரவர் வயதிற்கேற்ற வகையில் நன்மைகள் இருக்கும். எதுவும் எல்லை மீறிப் போகாது.

மாத ஆரம்பத்தை விட மாதத்தின் பிற்பகுதி நன்மைகளைத் தரும். ராசிநாதன் சனி, சுக்கிரனின் இணைவால் சுபத்துவமாக இருப்பது எதையும் சமாளிக்கும் ஆற்றலையும், திறமையையும் தரும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள்.  சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிவத்தொண்டு செய்வீர்கள். அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். சிலருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு மூலம் தொழில் லாபங்கள் இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் நடக்கும். வேற்று மத, இன, மொழிக்காரர்கள், வெளிநாட்டுக் காரர்கள், வெளிநாடு, வெளிமாநில வேலை மற்றும் தொழில் அமைப்புகள், மற்றும் அந்நிய இன நண்பர்கள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

கருப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கெடுபலன்கள் இராது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் தொழில் முன்னேற்றம் இருக்கும். யாருக்கும் ஜாமீன் போடுவது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு. மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

5,6,7,12,13,19,20,22,30,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 22 -ம்தேதி இரவு 1.27 மணி முதல் 24 -ம்தேதி மதியம் 2.20 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் செய்யவேண்டாம். மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537