
மேஷம் :
ராசியில் குரு இருப்பதும், ராசிநாதன் செவ்வாய் இன்னும் சில வாரங்களுக்கு குருவின் பார்வையில் மங்கள யோகத்தில் இருக்கப்போவதும் மேஷ ராசிக்கு முன்னேற்றங்களைத் தரும் என்பதால் இந்த வாரம் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகளை ஜெயிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றம் இருக்கும். வீடு, வாகனம், தாயார், தன் சுகம் போன்றவைகளில் நல்லது நடக்கும். சிலர் உல்லாசப் பயணங்கள் மற்றும் ஜாலியான அனுபவங்களுக்கு வீண்செலவு செய்வீர்கள்.
மேஷ ராசிக்கு அனைத்து தடைகளும் நீங்கி மடை திறந்த வெள்ளம் போல் நன்மைகள் வருகின்ற வாரமிது. மற்ற கிரகங்களும் யோகநிலையில் இருப்பதால் தொட்டது துலங்கும். அரசு ஊழியருக்கு இது நல்ல வாரம். சிலருக்கு தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். பரம்பொருளின் அருளினால் இந்த வாரம் உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் தாராளமாக உண்டு.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
மேஷம்:
ராசிநாதன், செவ்வாய் மாதம் முழுவதும் ஏழாம் வீடான சுக்கிரனின் வீட்டில், குருவின் பார்வையில் சுபத்துவமாக இருப்பதால் மேஷ ராசியினருக்கு நல்ல வாய்ப்புகள் வரும் மாதம் இது. ஆனால் ராசியில் ராகு இருப்பதால் அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாமல் வீணடிப்பீர்கள். மேஷத்தினரின் கவனம் சிதறும் மாதம் இது. தேவையற்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இளைஞர்கள் எதிர்காலத்திற்குரிய விஷயங்களை செய்யாமல் வயதுக்குரிய காதல் போன்ற விஷயங்களில் சக்தியை இழப்பீர்கள். எதிலும் அக்கறையுடன் இருக்க வேண்டிய மாதம் இது. எந்த ஒரு விஷயத்திலும் இது நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். காரணம் எதுவுமின்றி எதையாவது நினைத்து கலக்கமடைவீர்கள்.
ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் குருவின் பார்வையில் வலுவாக இருப்பதால் எதுவும் கைமீறிப் போகாமல் சமாளிப்பீர்கள்.. சிலருக்கு அலைச்சல்களும் எதிர்காலத்தை பற்றிய பயங்களும் இருக்கும். பெரியவர்களுக்கு காரியத்தடையும், சுற்றி உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களும் உண்டு. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். விரயங்கள் வரும். சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை நம்ப வேண்டாம். தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். புதன் உச்சமாக இருப்பதால் பணப்பிரச்னைகள் எதுவும் வராது. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபங்கள் இருக்கும்.
ராசிநாதன் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும். ஏழாம் வீட்டில் இருப்பதால் திருமணமாகாத மேஷ ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வரும் நேரம் இது. நீண்ட நாட்களாக திருமணம் தாமதமாகி வருபவர்கள் இன்னும் ஒரு வருடத்தில் வாழ்க்கைத் துணையோடு இணைவீர்கள். சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நடுத்தரவயதை கடந்தவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண்அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். சிலருக்கு இளைய சகோதர்களால் வீண் விரயங்களும் செலவுகளும் இருக்கும். வியாபாரிகள் மந்தமான ஒரு நிலையை சந்திப்பீர்கள்.
5,6,7,11,12,13,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 17 -ம் தேதி மதியம் 2.19 மணி முதல் 19 -ம் தேதி இரவு 9.03 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.