adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 162 (21.11.17)

கே. கிருஷ்ணவேணி, சென்னை.

கேள்வி :

என் மகன் பிறந்ததில் இருந்து நல்ல பிள்ளையாக இருந்தான். திருமணம் முடிந்தவுடன் மனைவியின் தூண்டுதலின்படி தனிக்குடித்தனம் சென்றான். தண்ணீர் வியாபாரம் செய்தான். அதில் பயங்கர நஷ்டமாகி கடன் தொல்லையால் அவதிப்படுகிறான். பொன், பொருள் அனைத்தையும் இழந்தும் கடன் தீரவில்லை. நிம்மதியே இல்லை. எப்போதுதான் அவனுக்கு கடன் பிரச்சினை தீரும்?

குரு  சூ பு சுக்,கே சனி
 செவ்
 19-4-1975 இரவு11.07 சென்னை
 சந்
 ரா
பதில்:

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் தசை யோகங்களை செய்யாது என்பது ஜோதிட விதி. மகனின் ஜாதகத்தில் 2005 முதல் சுக்கிரனின் தசை நடந்து வருகிறது. இது 2025 வரை நீடிக்கும். சுக்கிரன் கடன், நோய், எதிரியை குறிக்கும் ஆறாம் பாவத்திற்கு அதிபதியாகி, ஆறாம் வீட்டிலேயே அமர்ந்து, வலுவான எட்டாம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரமான ரோகிணியில் இருக்கிறார். சந்திரன் நீர் கிரகம் என்பதால் அவருடைய வழிகளில் கடன் ஏற்பட வேண்டும் என்பதன்படி தண்ணீர் வியாபாரம் செய்து நஷ்டம் ஏற்பட்டு விட்டது.

ஜாதகப்படி திரவப் பொருட்கள் மகனுக்கு லாபத்தை தராது. சுக்கிர தசை முடியும் வரை கடன் தொல்லைகள் இருந்துதான் தீரும். அடுத்து நடக்க இருக்கும் சூரிய தசை தர்ம கர்மாதிபதி யோகத்துடன் உச்சநிலையில் சுப வலுவுடன் இருப்பதால் சூரிய தசையில் படிப்படியாக கடன்கள் தீர ஆரம்பித்து, பிற்பகுதி வாழ்க்கையில் உங்கள் மகன் கடன் தொல்லைகள் இன்றி சந்தோஷமாக இருப்பார்.

இருதயராஜ், பாண்டிச்சேரி.

கேள்வி :

மளிகைக் கடை வைத்து நஷ்டம் அடைந்து விட்டேன். பிறகு உறவினருடன் கூட்டாக மரத்தொழில் செய்தேன். பிரிவினை ஏற்பட்டு எனது முதலீட்டை பிறகு தருவதாக சொன்ன உறவினர் திடீரென இறந்து விட்டார். அடுத்து மனைவியின் நகைகளை அடகு வைத்து நண்பர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தேன். வட்டியும் வரவில்லை, அசலும் வரவில்லை. இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று சொல்லியே ஏமாற்றுகின்றனர். மனதளவில் தினமும் போராட்டம்தான். தெரிந்த ஜோதிடர் ஒருவர் பணம் திரும்பி வராது, கோர்ட்டுக்குப் போனால்தான் கிடைக்கும் என்கிறார். கோர்ட்டுக்கு போகலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறேன். என்ன செய்வது என்று நல்ல பதில் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:
குரு செவ் கே சந்
1-9-1975 காலை 8.57 பாண்டிசேரி
சனி
சூ சுக்
 ரா ல பு

கன்னி லக்னத்திற்கு ஐந்து, ஆறுக்குடைய சனியின் தசை நடந்து கொண்டிருக்கிறது. சனி ஐந்தாமிடத்தைப் பார்த்து தசை நடத்துவதால், தசையின் முதல் பாதி வருடங்கள் ஐந்துக்குடைய பலனையும், பின் பாதி வருடங்கள் ஆறாமிடத்து பலனையும் செய்வார். 2011-ல் ஆரம்பித்த ஆறாமிடத்தைப் பார்க்கும் சுக்கிர புக்தியில் இருந்து தேவையில்லாமல் கடன் தொல்லையில் மாட்டி இருப்பீர்கள்.

கடந்த மூன்று மாத காலமாக செவ்வாயின் பார்வையை பெற்று, செவ்வாயின் வீட்டில் இருக்கும் ராகுவின் புக்தி நடந்து கொண்டிருப்பதால் நீங்கள் கோர்ட்டுக்குப் போவீர்கள். அடுத்து வர இருக்கும் குருபுக்தியில் பண விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். கொடுத்த பணம் சிறிது, சிறிதாகத்தான் வரும். ஆனால் அது உங்களுக்கு உபயோகமாக இருக்காது. அதேநேரத்தில் சனி தசைக்குப் பிறகு வரும் புதன்தசை லக்னாதிபதி மற்றும் ராசிநாதனின் தசை என்பதால் யோகத்தை தருவதோடு நிம்மதியான வாழ்க்கையையும் தரும்.

எஸ். பக்கீர்மைதின், பல்லடம்.

கேள்வி :

மகனுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஜவுளிக்கடை வைத்து கொடுத்தேன். நன்றாக வியாபாரம் நடந்தும் அவனது தவறான பழக்கங்களால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. தற்போது கடையும் இல்லை. அவனை மேற்குத் திசை நாட்டிற்கு வேலைக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன். சரி வருமா? கடந்த காலங்களில் இவன் செய்த அடாவடிகளால் இவனை வெளியே அனுப்புவதற்கும் பயமாக இருக்கிறது. பதினெட்டு வருடங்களாக சர்க்கரை நோயாளியாக இருக்கும் எனக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அவளைக் கரை சேர்க்கும்வரை நான் நன்றாக இருந்தாக வேண்டும். அதுவரை பரம்பொருளின் கருணைப் பார்வை எனக்கு கிடைக்குமா? சர்க்கரை நோயில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்?

பதில்:
 செவ்
 
19-11-1990 இரவு 8.12 பல்லடம்
குரு கே
ரா
 சனி சந்,சூ பு,சுக்

மகனுக்கு கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மகளுக்கு அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி என்று ஒரே வீட்டில் இரண்டு சனி இருந்த நிலையில் ஜோதிட நம்பிக்கை உள்ள நீங்கள் ஏழரைச்சனி துவங்கிய 2012-ம் ஆண்டு ஒரு 22 வயது இளைஞனுக்கு கடை வைத்துக் கொடுத்தது பரம்பொருளின் விருப்பமேயன்றி வேறேன்ன சொல்வது?

மகனுக்கு ஜென்மச்சனி முடிந்து விட்டதாலும் நடக்கும் தசைபுக்தி நாதர்கள் புதன், சுக்கிரன் இருவரும் ஆறாமிடத்தில் அமர்ந்து பனிரெண்டாம் இடத்தைப் பார்ப்பதாலும் அடுத்த வருடம் அவனை மேற்குத்திசை நாடு ஒன்றுக்கு வேலைக்கு அனுப்புவீர்கள். குடும்பத்தில் இருவருக்கு ஜென்மச் சனி முடிந்துவிட்டதால் இனிமேல் பிரச்சினைகள் எதுவும் இருக்காது. உங்களது ஆரோக்கியமும் கவலைப்படும்படி இருக்காது. சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுக்குள் வைக்க முடியும்.

குணசேகரன், பாண்டிச்சேரி.

கேள்வி :

மகளுக்கு 4 வருடமாக வரன் பார்க்கிறேன். முடியும் நிலையில் ஏதாவது ஒரு தடங்கல் வருகிறது. இவளது அண்ணன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அந்தப் பெண்ணின் வீட்டில் அவசரப்படுகிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தங்கை இருக்கும்போது அண்ணனுக்கு எப்படி கல்யாணம் செய்து வைப்பது என்றும் புரியவில்லை. உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

பதில்:
சந்
கே
 
4-8-1991 மாலை 5.40 பாண்டிசேரி
சூ குரு
ல சனி  பு,சுக்செவ்
ரா

சுக்கிரன் வக்ரமாகி, எட்டில் செவ்வாய் இருந்து, எட்டுக்குடையவன் ஏழில் அமர்ந்து, ஏழாமிடத்தை சனியும் பார்க்கும் அமைப்புள்ள பெண்ணிற்கு 28 வயதிற்கு முன்பு திருமணம் செய்யக் கூடாது. தற்போது அஷ்டமச்சனி அவளுக்கு நடப்பதும் அனைத்திலும் தடைகளைக் கொடுக்கும். இன்னும் ஒரு வருடம் பொறுத்திருக்கவும். அவசரப்பட்டு பெண்ணின் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தி விட வேண்டாம். ஒரு அண்ணனின் கடமை என்ன என்பதை மகனுக்கு விளக்கிச் சொல்லவும்.

கே. ராமச்சந்திரன், கோவை.

கேள்வி :

பூமியின் மீது கடன் பெற்று நானும், எனது நண்பரும் சேர்ந்து பால்பண்ணை தொழில் செய்ய முடிவு செய்து, தொழில் ஆரம்பித்து 3 வருடமாகிறது. மேலும் பணம் பெற்று தொழில் செய்தால் சிறப்பாக அமையுமா?

பதில்:
 கே  செ குரு
 சூ,பு சுக்
 
24-2-1978 இரவு 7.40 கோவை
 ல சனி
சந் ரா 

லக்னம் முடியும் தருவாயில் சந்தியில் பிறந்திருக்கிறீர்கள். ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்ந்து, லக்னத்திற்கு ஐந்தாமிடத்தை பார்க்கும் யோகாதிபதி குருவின் தசை தற்போது நடப்பதால் தொழிலை உங்களால் விரிவாக்கம் செய்ய முடியும். தொழிலும் லாபகரமாக நடக்கும் வாழ்த்துக்கள்.

எஸ். மாலா, மதுரை.

கேள்வி :

ஒரு பிரைவேட் கம்பெனியில் டெபாசிட் ஏஜெண்டாக பணி புரிகிறேன். என் மூலமாக பலர் கம்பெனியில் பணம் கட்டி இருக்கிறார்கள். இப்போது கம்பெனியில் பணத்தை திருப்பித் தர மிகவும் தாமதப்படுத்துகிறார்கள். இதனால் என் மூலமாக பணம் கட்டியவர்கள் தினந்தோறும் என்னை போன் மூலமாகவும், நேரிலும் கேட்டு மிகவும் வேதனையடையச் செய்கிறார்கள். அனைவருக்கும் பணத்தை வாங்கிக் கொடுத்து விடுவதாக உறுதி கொடுத்து இருக்கிறேன். ஆனால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மிகுந்த மனஉளைச்சலுடன் நாள்தோறும் தவித்து வருகிறேன். நான் நல்ல பெயர் எடுப்பேனா? அல்லது வாக்குத் தவறி விடுவேனா?

பதில்:
குரு  கே செவ்
 
27-11-1975 அதிகாலை 1.15 மதுரை
சனி
ல சந்
 சூ பு ரா சுக்

அதிகாலை நேரத்தில் இரவு 12 மணிக்கு மேல் பிறப்பவர்கள் ஜாதக நகலையோ அல்லது நட்சத்திரத்தையோ குறிப்பிட்டால், நீங்கள் ஆங்கில முறைப்படி எந்த தேதியில் பிறந்திருக்கிறீர்கள் என்று சரி பார்த்து பலன் சொல்வதற்கு உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் இவற்றைக் குறிப்பிடாததால், கொடுத்துள்ள விபரப்படி 26-ந்தேதி இரவு விடிந்தால் 27-ம்தேதி அதிகாலை பூரம் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருப்பதாக கணக்கிட்டு இந்த பதிலைத் தருகிறேன்.

பொதுவாக சிம்ம லக்னத்திற்கு ராகுதசை நன்மைகளை செய்வது இல்லை. அதிலும் உங்கள் ஜாதகத்தில் ராகு, நீச சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து தசை நடத்துகிறார். 2012 தீபாவளிக்குப் பிறகு நீங்கள் செய்த விஷயங்களால் இப்போது உங்களுக்கு தலைவலிகள் இருக்கும். இந்த நவம்பர் மாதம் முதல் ராகு தசையில் சனி புக்தி ஆரம்பித்து இருப்பதால் ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் தொல்லைகள் உங்களுக்கு வர வேண்டும்.

உங்களுக்கு சாதகமாக பதில் தர ஜாதக நிலைமை சரியாக இல்லை. கொடுத்த வாக்கை காப்பாற்றுவேனா என்று கேட்டிருக்கிறீர்கள். வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டில் நீச சுக்கிரன் அமர்ந்து சனி, செவ்வாய் இருவரும் அந்த வீட்டை பார்ப்பதால் உங்களால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல்கள் வரும்.

வி.ஏ. நல்லதம்பி, பள்ளிப்பாளையம்.

கேள்வி :

கடந்த 4 வருடங்களாக குறிப்பாக 2015-ற்கு பிறகு கடிதத்தில் எழுத முடியாத அளவிற்கு பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். கடந்த வருடங்களில் பணம், பொருள், நட்பு, உறவு என்ற வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் தெரிந்து விட்டது. இன்னும் திருமணம் ஆகவில்லை. நிலையான தொழிலும் அமையவில்லை. நூல் வியாபாரம் செய்து வருகிறேன். தொடர்ந்து செய்யலாமா? எப்போது திருமணம், தொழில் அமையும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

பதில்:
ரா  சுக் சூ செவ்
 
30-6-1985 மதியம் 3.45 ஈரோடு
பு
குரு
 ல சந் சனி கே

நடுத்தர வயதுகளில் இருக்கும் கேட்டை நட்சத்திரக்காரர்கள் எவரும் நன்றாக இல்லை என்பதை மாலைமலரிலும், முகநூல், தொலைக்காட்சிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அதற்கு நீங்கள் விதிவிலக்காக இருக்க முடியாது. உங்களை போலவே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களிடம் நீங்கள் என்ன ராசி என்று கேளுங்கள் அவர் விருச்சிகம் அல்லது மேஷமாக இருப்பார்.

உங்கள் அனைவரின் துயரமும் கடந்த அக்டோபர் முதல் விலகி நல்லவைகள் நடக்கும் காலம் ஆரம்பித்து விட்டது. அடுத்த வருடம் முதல் படிப்படியாக பிரச்சினைகள் குறையத் துவங்கி இன்னும் 6 மாதங்களுக்குள் நிலையான வருமானத்தை பெறுவீர்கள். திருமணமும் அடுத்த வருடம் நடைபெறும். கஷ்டங்கள் விலகி விட்டதால் பரிகாரங்கள் எதுவும் தேவை இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *