ஜி. சிவக்குமார், பழநி.
கேள்வி :
47 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. நடக்குமா? நடக்காதா? ஜோதிடர்கள் சொன்ன எல்லா பரிகாரமும் செய்து கடனாளி ஆனதுதான் மிச்சம். சிலர் இது ஒரு சாமியார் ஜாதகம் என்று சொல்கின்றனர். உண்மையா? சொந்தத்தொழில் செய்தால் நஷ்டம்தான் ஆகிறேன். தொழில் செய்யலாமா? அல்லது வெளிநாடு செல்லலாமா? ஏழரைச்சனியில் இன்று வரை விரையம், சண்டை, போலீஸ், கடன், அசிங்கம்தான் ஏற்பட்டு விட்டது. கடனை அடைக்க முடியுமா? எப்போது விடிவு காலம்?
பதில்:
ல | சனி | பு | சூரி செவ் |
ரா |
17-6-1970,
அதிகாலை1.40,
தேனி.
|
சுக் | |
கே | |||
சந் குரு |
லக்னாதிபதி வலுவிழந்தாலே வாழ்க்கையில் எதுவும் தாமதமாக கிடைக்கும். அல்லது கிடைக்கவே கிடைக்காது. உங்கள் ஜாதகத்தில் லக்னநாயகன் குரு எட்டில் பகை பெற்று மறைந்து, சந்திரனும், குருவும் நீச சனியின் பார்வையை பெற்றதால், லக்னம், ராசி இரண்டுமே வலுவிழக்கிறது. மேலும் கடுமையான புத்திர தோஷம் இருந்தாலும் திருமணம் தாமதமாக நடக்கும். உங்கள் ஜாதகத்தில் புத்திரகாரகன் குரு வலுவிழந்த நிலையில் இருக்க, புத்திர ஸ்தானத்தில் எட்டுக்குடையவன் இருப்பதும், ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பதும் கடுமையான புத்திர தோஷம்.
பிறப்பு ஜாதகம் யோகமாக இல்லாத நிலையில் நடக்கும் ஏழரைச்சனி ஒருவருக்கு கடுமையான கெடுபலன்களை தரும். சனி நடக்கும் போது சொந்த தொழில் செய்தது தவறு. பத்துக்குடையவன் எட்டில் மறைவதால் உங்களுக்கு சுயதொழில் ஒத்து வராது. கேது தசை நடப்பதாலும், அடுத்து அஷ்டமாதிபதி சுக்கிர தசை ஆரம்பிக்க உள்ளதாலும், வெளிநாட்டில் வேலைக்கு செல்வீர்கள். சுக்கிர தசையில் கடனை அடைக்க முடியும். ஆனாலும் புதிதாக இன்னொரு கடன் வரும்.
லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை இதுவரை நீங்கள் செய்திருக்க முடியாது. அவற்றை ஏற்கனவே மாலைமலரில் தெளிவாக எழுதி இருக்கிறேன். தேடிக் கண்டுபிடித்து படியுங்கள். அடுத்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கும் குரு புக்தியில் பரிகாரங்களுக்கு பின் திருமணம் நடக்கும்.
பி. ஜெயப்பிரகாசம், திருச்சி.
கேள்வி :
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் தேர்வுகளில் நூலிழையில் தோல்விகளே ஏற்படுகிறது. எனக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது தனியார் துறையா? அல்லது சுயதொழிலா? 2016 முதல் குடும்பத்தில் கடன், மருத்துவ செலவு, சண்டை, சங்கடங்கள் என்றே இருந்து வருகிறது. எப்போது சரியாகும்? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
3-1-1992, இரவு7.20, ஆத்தூர் | ல | ||
சனி | குரு | ||
சந்,சூ செவ் ரா | பு சுக் |
கடந்த இரண்டு வருடங்களாக தனுசுராசிக்கு ஏழரைச் சனி நடந்து வருவதால் குடும்பத்தில் குழப்பம், எதிலும் தோல்வி போன்ற பலன்கள் நடந்து வருகின்றன. இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து ஜென்மச் சனி விலகியதும் அனைத்தும் சரியாகும்.
உங்களுக்கு கடக லக்னமாகி 2, 6-க்குடைய சூரியனும், குருவும் பரிவர்த்தனை பெற்ற நிலையில், சிம்மத்திற்கு பாபத்தொடர்புகள் இன்றி, தற்போது குருவின் பார்வை பெற்ற சூரிய தசை நடப்பதால் வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கும் குரு புக்தியில் வங்கித் துறையில் பணியாற்றுவீர்கள். எனவே அரசு வேலைக்கு முயற்சிப்பதை கைவிட்டு வங்கி தேர்வு எழுதுங்கள். வெற்றி கிடைக்கும். இரண்டாம் இடத்தில் குரு சுபத்துவமாக அமர்ந்து பத்தாம் வீட்டை பார்த்தாலே ஒருவருக்கு ஆசிரியர் அல்லது வங்கிப்பணி அமையும். எதிர்காலத்தில் குருவின் பார்வையில் உள்ள சூரிய, சந்திர, செவ்வாயின் தசைகள் நடக்க இருப்பதால் வருங்காலம் கவலைப்படும்படி இருக்காது.
வி. ஜி. தேவேந்திரன், சென்னை - 118.
கேள்வி :
37 வயதாகும் மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்று உங்களிடம் கேட்டிருந்தேன். ஸ்ரீகாளஹஸ்தி அழைத்துப் போய் வரவும் என்று பதில் கொடுத்திருந்தீர்கள். ஆனால் எவ்வளவு வற்புறுத்தியும் மகன் வரமாட்டேன் என்கிறான். அவனுடைய தாயார் கடுமையான வேதனையில் இருக்கிறார். அவன் திருமணம் நடைபெற நாங்கள் என்ன செய்ய வேண்டும். அவனுக்கு திருமணம் நடக்குமா? இல்லையா? என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும்.
பதில்:
சந்
சூரி
|
பு சுக் | ||
11-6-1980, காலை9.20, சென்னை | ல ரா | ||
கே | குரு செவ் சனி | ||
ஒளிக்கிரகங்களான கடக, சிம்ம லக்னங்களில் பிறப்பவர்களுக்கு பாபத்துவம் பெற்ற ராகுவின் தசை வரும்போது நன்மைகள் நடக்காது. மகனின் ஜாதகத்தில் குடும்ப வீடான இரண்டாம் ஸ்தானத்தில் புத்திர காரகனான குரு மற்றும் புத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் இருவரும் சனியுடன் இணைந்து கடுமையான புத்திர தோஷம் ஏற்பட்டு இருப்பதாலும் திருமணம் தள்ளிப் போகிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை ராகு தசை நடப்பதால் இவருக்கு பரிகாரம் செய்யும் வாய்ப்பு இல்லை. குருதசை சுயபுக்தியில் 39 வயதில் பரிகாரம் இன்றியே திருமணம் நடக்கும். கவலை வேண்டாம்.
அ. ராமசுப்பிரமணியம், ராஜபாளையம்.
கேள்வி :
வெளிநாட்டில் பணிபுரியும் எனது மகன் மற்றும் மருமகளின் ஜாதகங்களை இணைத்துள்ளேன். இருவரின் ஜாதகத்திலும் குரு, சுக்கிரன் சேர்க்கை எட்டு டிகிரிக்குள் உள்ளது. குழந்தை இதுவரை இல்லை. சூழ்நிலையும் ஒத்து வரவில்லை. குழந்தை பிறக்க தடை ஏதும் உள்ளதா? இருவருக்கும் வெளிநாட்டுப் பணியே நிரந்தரமாகுமா? சனிதசை நான்காவது தசையாக வருவது கெடுதல் எதுவும் செய்யுமா?
பதில்:
ரா ல | |||
20-11-1984, இரவு 7.25, சிவகாசி | |||
செவ் | |||
சுக் குரு | சூ,பு கே | சந் சனி |
சூ,குரு பு,சுக் | செவ் ல | ||
சந் ரா | 29-5-1989, காலை 8.27, மதுரை | ||
கே | |||
சனி |
குருவும், சுக்கிரனும் மிக நெருக்கமாக இணைந்தாலே, சுக்கிரன் தரும் தாம்பத்திய சுகத்தை குரு கொடுக்க விட மாட்டார், குருவின் புத்திர சுகத்தை சுக்கிரன் தடை செய்வார் என்பதை பல ஜாதகங்களில் நிரூபித்திருக்கிறேன். இயற்கை சுபர்களான குருவும், சுக்கிரனும் ஒரு பாவத்தில் மிக நெருக்கமாக இணையக் கூடாது. இணையும் வீட்டின் தன்மையைப் பொருத்து எந்த சுகம் தடைப்படும் என்பதை முடிவு செய்ய முடியும்.
மகன், மருமகள் இருவரும் வெளிநாட்டில் இருப்பதால் பரிகார ஸ்தலங்களுக்கு வருவதற்கும் வாய்ப்பு இல்லை. மேலும் மகனுக்கு கடக லக்னமாகி, குரு எட்டில் மறைந்து ஐந்துக்குடைய புதன் ராகு-கேதுக்களுடன் இணைந்திருப்பதும், மருமகளுக்கு மிதுன லக்னமாகி புத்திரகாரகன் குருவும், ஸ்தானாதிபதி சுக்கிரனும் பனிரெண்டில் இருப்பதும் புத்திர தோஷ அமைப்புகள். எனவே தாமதமான புத்திர பாக்கியம் அமையும். வேறு சில சூட்சும விதிகளின்படி தாமதமானாலும் புத்திர பாக்கியம் கண்டிப்பாக உண்டு.
இருவருக்குமே எட்டு, பனிரெண்டுக்குடையவர்கள் சுபத்துவம் அடைவதால் வெளிநாட்டில்தான் நிரந்தரமாக இருப்பார்கள். அதாவது மகனுக்கு எட்டுக்குடையவர் ஆட்சி, பனிரெண்டுக்குடையவர் உச்சம் என்றாகி, மருமகளுக்கு லக்னாதிபதி பனிரெண்டில் அமர்வு, பனிரெண்டில் சுக்கிரன் ஆட்சி அஷ்டமாதிபதி சனி குருவின் வீட்டில் என்பதால் இருவரும் நிரந்தரமாக வெளிநாட்டில்தான் வசிப்பார்கள்.
டி. டாங்கே, புதுச்சேரி - 1.
கேள்வி :
1970-ம் ஆண்டில் இருந்து மளிகை வியாபாரம் செய்து வருகிறேன். இடையில் இரண்டு தடவை கடையை நடத்த முடியாமல் எடுத்து விட்டேன். மீண்டும் 2013ம் வருடத்தில் இருந்து அதே வியாபாரத்தை நடத்தி வருகிறேன். நஷ்டம் ஏற்பட்டு கடனாகிவிட்டது. மேற்கொண்டு கடையை நடத்தலாமா? வேண்டாமா என்பதையும் கடன்களில் இருந்து விடுதலை பெறுவேனா என்பதையும் தயவு செய்து தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
பதில்:
செவ் கே | சுக் | ||
20-7-1958, மாலை5.30, கடலூர் | சூ | ||
சந் பு | |||
ல | சனி |
ரா
|
குரு |
2013-ம் ஆண்டு முதல் உங்களின் தனுசு லக்னத்திற்கு கெடுபலன்களையும், கடன்களையும் தரக்கூடிய சுக்கிர புக்தி ஆரம்பித்த நிலையில் மீண்டும் வியாபாரத்தை ஆரம்பித்ததால் கடனாளியாகி விட்டீர்கள். 2013-ம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை ஆறாம் அதிபதியான சுக்கிரன், அடுத்து எட்டில் மறைந்த சூரியன், அதனையடுத்து அஷ்டமாதிபதியான சந்திரனின் தசைகள் என ஆறு, எட்டு சம்பந்தப்பட்ட புக்தி நடந்ததாலும், கடந்த மூன்று வருடங்களாக உங்களின் சிம்மராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெற்றதாலும், உங்களின் வியாபாரம் சரியில்லாமல் போய் கடன் ஏற்பட்டது.
கடந்த வாரம் முதல் சனி விலகி விட்டதாலும், பத்து நாட்களுக்கு முன் ராசி, லக்னம் இரண்டிற்கும் யோகாதிபதியான செவ்வாயின் புக்தி ஆரம்பித்து இருப்பதாலும், அடுத்து பதினொன்றாம் இடத்தில் செவ்வாயின் பார்வையில் உள்ள ராகுவின் புக்தி நடக்க உள்ளதாலும் இனிமேல் வியாபாரம் நன்றாக இருக்கும். கடையை முனைப்புடன், நம்பிக்கையுடன் தொடர்ந்து நடத்துங்கள். இன்னும் மூன்று வருடங்களுக்குள் கடன் தொல்லையில் இருந்து விடுபடும் அளவிற்கு நல்ல வருமானம் வரும். மனதை தளர விட வேண்டாம். கடன் தொல்லைகள் கண்டிப்பாக விலகும்
கோடீஸ்வரனாகும் யோகம் இருக்கிறதா?
ஆர். தனு, யாழ்ப்பாணம்.
கேள்வி :
தொலைவில் இருந்தாலும் இணையம் வழியாக உங்கள் எழுத்தினைப் படிக்கும் பாக்கியம் பெற்ற அதிர்ஷ்டசாலி நான். நடைபெறும் புதன்தசை எனக்கு எப்படியான பலனை செய்யும்? எட்டாமிடத்து தீமைகளும் நடைபெறுமா? சொந்தத்தொழில் செய்தால் கோடீஸ்வரனாகும் யோகம் இருக்கிறதா? வெளிநாட்டு யோகம் உண்டா? குரு, புதன், சுக்கிரன் மூவரும் எனது ஜாதகத்தில் அஸ்தங்கம் ஆகி இருக்கிறார்கள். இதில் குருவும், புதனும் திக்பலம் அடைந்திருப்பதால் அவை வலிமையாக உள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா? தர்மகர்மாதிபதி யோகத்தை நவாம்சத்திலும் பார்க்கலாமா?
பதில் :
ரா | |||
ல,சுக் சந்,பு குரு | 11-2-1986, காலை7.34, யாழ்ப்பாணம் | ||
சூ | |||
செவ் சனி | கே |
இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் எந்த வீட்டு தொடர்பை அதிகம் பெற்றுள்ளனவோ அதன் பலனை கூடுதலாகவும், இன்னொரு வீட்டுப் பலனை குறைவாகவும் செய்யும். தனது தசையில் மூலத்திரிகோண வீட்டின் பலனை முதலில் செய்யும். உங்கள் ஜாதகத்தில் எட்டுக்குடைய புதன், அந்த வீட்டிற்கு ஆறில் மறைந்துள்ளதால், சுப வீடான ஐந்தாம் வீட்டின் பலனையே தனது தசையில் கூடுதலாகத் தருவார்.
புதனுக்கு மட்டும் அஸ்தங்க தோஷம் இல்லை என்று நம்முடைய மூலநூல்களில் ஒருமித்து தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே திக்பலம் பெற்ற புதன் தசையில் உங்களுக்கு நன்மைகளே அதிகம் இருக்கும். அதேநேரத்தில் எட்டாம் இடத்தின் சுபத்துவ பலனான வெளிநாட்டு யோகமும் புதனால் கிடைக்கும். புதன்தசை திருக்கணிதப்படி 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் ஆரம்பிக்கிறது. கோடீசுவரன் ஆவது ஒருபுறம் இருக்கட்டும். புதன் தசையில் சுயபுக்தி முடியும் வரை சொந்தத்தொழில் செய்ய வேண்டாம்.
அஸ்தங்கம் ஆன கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றிருந்தால் மட்டுமே இழந்த வலுவை திரும்பப் பெறுவதாக ஞானிகள் சொல்லி இருக்கிறார்கள். ஆயினும் வலுவிழந்த ஒரு கிரகம் திக்பலம் அடைவது, இழந்த வலுவை ஓரளவு திரும்ப பெறுவதுதான். எனவே திக்பலம் அடைந்த கிரகம் அதன் ஆதிபத்தியத்தையும், காரகத்துவத்தையும் தரும் வலுவோடுதான் இருக்கும்.
நவாம்சத்தில் பார்வை, யோகம் எதுவுமே கிடையாது. நவாம்சத்தில் இந்தக் கிரகம் இதைப் பார்க்கிறது என்று சொல்பவர்கள் ஜோதிடத்தை மேம்போக்காக தெரிந்தவர்கள். ராசிக்கட்டம் என்பது நிஜம். நவாம்சம் என்பது நிழல். ஒரு கிரகத்தின் யோகம், பார்வை என்பது ராசிக்கட்டத்தில் மட்டும்தான்.
நவாம்சத்தில் கிரகங்களின் ஆட்சி, உச்சம், பகை, நீசம், சுப, அசுப வீடு இருப்பு, கிரகச் சேர்க்கைகளை மட்டுமே பார்க்க வேண்டும். அதேபோல நவாம்சத்தில் எண்ணிக்கையும் கிடையாது. ஒரு கிரகம் அம்சத்தில் எட்டில் மறைகிறது என்று சொல்வதும் தவறுதான்.
எனது மகன் மீன் லக்னத்திற்கு 4ல் சூரியன் புதன் குரு. புதனும் குருவும் புனர்பூசம்3ம் பாதத்தில் சூரியன் திருவாதிரை4ல் உள்ளது அஸ்தமனம் தோசம் உள்ளதா?பிறப்பு 04.07.1990 இரவு 11.05 புதன் கிழமை தஞ்சாவூரில் பிறந்தவர் அவரின் திருமணம் மற்றும் எதிர்காலம் நன்றாக இருக்குமா தயவு செய்து விளக்க வேண்டுகிறேன். நன்றி!