adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 157 (17.10.2017)

ஆர். சாந்தி ரகு, குரோம்பேட்டை.

கேள்வி:

திருமணமாகி ஒரு வருடத்தில் கருத்தரித்த எனக்கு அது கலைந்து விட்டது. இரண்டு வருடமாக குழந்தைக்கு ஏங்கி கொண்டிருக்கிறோம். எப்போது அந்த பாக்கியம் கிடைக்கும்?

பதில்:

கணவன்-மனைவி இருவரின் ஜாதகத்திலும் ஐந்தாம் அதிபதி வலுவிழந்த நிலையில் இருப்பது புத்திர தோஷம். இதனால் தாமத புத்திர பாக்கிய அமைப்பு உருவாகிறது. வரும் ஜூலை மாதத்திற்கு பிறகு கருத்தரித்து 2019-ம் ஆண்டு தாய் ஆவாய். வாழ்த்துக்கள்.

எம்மதிவாணன், செய்யாறு.

கேள்வி:

ஒரு கட்டுரையில் எட்டாம் வீடும், பனிரெண்டாம் வீடும் சுபத்துவமாகி இருந்தால் வெளிநாட்டு யோகம் என்று எழுதி உள்ளீர்கள். என் ஜாதகத்தில் எட்டு, பனிரெண்டாம் அதிபதிகளான குருவும், செவ்வாயும் இணைந்து இருக்கிறார்கள். எனக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரவில்லையே ஏன்? அடுத்து வரும் ராகு தசை எப்படி இருக்கும்? ராகு தசையில் ஜோதிடத்தில் மேன்மை உண்டா?

பதில்:
கே  செவ் குரு
9-10-1977, இரவு 7.37, செய்யாறு
 சந் சுக் சனி
சூ,பு ரா

என்னுடைய கட்டுரைகளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆழமான அர்த்தங்கள் இருக்கின்றன. எதையும் நான் மேம்போக்காக எழுதுவது இல்லை. தீர ஆய்வு செய்து நிரூபணம் ஆனதற்கு பிறகே எழுதுகிறேன். அதேபோல என்னுடைய கட்டுரைகள் அனைவருக்கும் புரிய வேண்டிய அவசியம் இல்லை. ஜோதிடராகவே இருந்தாலும் சிலருக்கு புரிவது கடினம்.

எட்டு, பனிரெண்டாம் இடங்கள் சுபத்துவமாகி இருந்தால்தான் வெளிநாட்டு வாய்ப்பு என்று என்னுடைய கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன் என்பது சரி. முதலில் அந்த சுபத்துவம் என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் தெரிந்திருந்தால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள்.

ஜோதிடத்தில் உள்ள மிக மிக நுணுக்கமான, புரிந்து கொள்ள கடினமான ஒன்று இந்த கிரகங்களின் சுபத்துவம் என்கின்ற அமைப்பு. உங்களுக்கு லக்னாதிபதி செவ்வாய், குருவுடன் இணைந்து சுபத்துவம் பெற்றிருக்கிறாரே தவிர எட்டுக்கு அதிபதியாக அவர் சுபத்துவம் அடையவில்லை. செவ்வாய் தனது எட்டாம் வீட்டிற்கு எட்டில் மறைந்திருக்கிறார். ஒரு கிரகம் தன் வீட்டிற்கு ஆறு,எட்டு, பனிரெண்டில் மறைந்தாலே அந்த வீட்டுப் பலனைத் தராது அல்லது மறைவு பலத்திற்கு ஏற்ப குறைத்துத் தரும்.

மேலும் உங்கள் ஜாதகத்தில் எட்டு, பனிரெண்டாம் இடங்களுக்கு சுபர் பார்வை, சுபர் சம்பந்தம் இல்லை. பனிரெண்டாம் அதிபதி குரு பாபரான செவ்வாயுடன் இணைவது பாபத்துவம். இவை தவிர வெளிநாட்டு பயணத்தை குறிக்கும் சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரத்தில் கிரகங்கள் இல்லை. ஒரே ஒரு அமைப்பாக அடுத்து ராகுவின் தசை நடக்க இருப்பது மட்டுமே உங்கள் ஜாதகத்தில் வெளிநாடு செல்வதை குறிக்கும் அமைப்பு. ராகு கன்னியில் இருப்பதால் செவ்வாய் தசையை விட ராகு தசை நன்மைகளை செய்யும். ராகு தசையில் ஜோதிடம் இன்னும் புரியும்.

எல்பிரபு, வண்ணாரப்பேட்டை.

கேள்வி:

வயது 30 ஆகிறது எதிர்காலம் குறித்து பயமாக இருக்கிறது. திருமணம் நடக்கவில்லை. வாழ்க்கையிலும் பெரிதும் முன்னேற்றம் இல்லை. உடல் நலமும் நன்றாக இல்லை. மனதிலும் தைரியம் இல்லை. எனக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?

பதில்:
குரு ரா
சுக் 10-1-1988, மாலை 6.52, சென்னை
 பு
சூ, சனி செவ் சந் கே

லக்னத்தை சுபராகிய தனிப் புதன் பார்க்கிறார். லக்னம், லக்னாதிபதி, ராசி மூன்றுமே ஒன்பதாம் வீட்டில் இருக்கும் குருவால் பார்க்கப்படுகிறது. ஆயினும் லக்ன பாபியான ராகுவின் தசை நடப்பதால் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக எட்டு, பனிரெண்டுக்குடைய சனி, புதன் புக்திகள் நடப்பதால் வயதிற்குரிய எவ்வித முன்னேற்றமும் இல்லை.

வரும் மார்ச் மாதத்திற்கு மேல் ராகு தசையில் சுக்கிர புக்தி ஆரம்பிப்பதால் வருட இறுதிக்குள் திருமணம் நடக்கும். கல்யாணத்திற்கு பிறகு யோகம் நடைபெறும் அமைப்புள்ள ஜாதகம் உன்னுடையது. ஜாதகம் வலுவாக இருப்பதாலும், அடுத்து பாக்கியாதிபதி குருவின் தசை ஆரம்பிக்க உள்ளதாலும் நீ பயப்பட தேவையில்லை. எதிர்காலம் நன்றாகவே இருக்கும். உடல் நலம் இன்னும் மூன்று வருடங்களில் சீராகும்.

துரைராஜ், விழுப்புரம்.

கேள்வி:

மகனுக்கு 30-7-2017-ல் திருமணம் செய்ய உத்தேசித்து இருந்தேன். அதற்குள் அரசியல் காரணத்திற்காக சிறை சென்றுள்ளான். எப்போது அவன் விடுதலையாகி வருவான், திருமணம் எப்போது நடத்தலாம் என்பதையும், ஏன் இந்த நிலைமை. எந்தக் கிரகங்களால் இப்படி ஆனது என்பதையும் விளக்குங்கள்.

பதில்:

வாக்கிய பஞ்சாகங்கப்படி கணிக்கப்பட்டுள்ள இந்த ஜாதகத்தில் பிறந்த நேரம் குறிப்பிடப்படவில்லை. நேரத்தைக் குறிப்பிட்டு மீண்டும் கடிதம் எழுதுங்கள். பதில் தருகிறேன்.

ஜிமுத்துக்குமார், பட்டாபிராம்.

கேள்வி:

குடியிருக்கும் வீட்டை விற்று மகனைப் படிக்க வைத்தேன். பி.. மெக்கானிக்கல் 85 சதவிகித மதிப்பெண் வாங்கியும் 12 ஆயிரம் சம்பளத்தில் தனியார் கம்பெனியில் இருக்கிறான். வங்கித்தேர்வு எழுதிக் கொண்டு இருக்கிறான். கிடைக்குமா அல்லது தனியார் கம்பெனிதானா? 2018-ல் எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று அவன் அம்மாவிடம் சொல்கிறான். குறைந்த சம்பளத்தில் எப்படித் திருமணம் செய்து வைப்பது என்று நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். தாங்கள்தான் இதற்கு வழி கூறவேண்டும். ஜாதகப்படி இவனது எதிர்காலம் எப்படி என்று கூறுமாறு வேண்டுகிறேன்.

பதில்:
சந் கே
20-11-1991, அதிகாலை 1.17, சென்னை
சனி ல குரு
ரா  சூ பு செவ் சுக்

மகனின் ஜாதகப்படி அரசுவேலைக்கு உரியவனும் லக்னாதிபதியுமான சூரியன் நான்கில் அமர்ந்து பத்தாம் வீட்டை பார்ப்பதும், வங்கி வேலைக்கு காரணமான குரு லக்னத்தில் சுபத்துவமாக இருப்பதும், தற்போது சூரியதசை நடந்து கொண்டிருப்பதும் உறுதியாக வங்கி வேலை, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்கு பிறகு கிடைக்கும் அமைப்புகள். 2019-ம் ஆண்டு சூரியதசை, சனி புக்தியில் திருமணம் நடைபெறும். அடுத்தடுத்து யோக தசைகள் நடைபெற உள்ளதால் எதிர்காலத்தில் கவலைப்பட தேவையின்றி நன்றாக இருப்பார்.

சேகர், திருவில்லிபுத்தூர்.

கேள்வி:

எனக்கு முதலில் கடவுள் நம்பிக்கை இல்லை. உங்களுடைய வாசகங்களைப் படித்த பிறகுதான் நம்பிக்கை வந்தது. எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா? அடுத்து வரும் தசைகள் எப்படி இருக்கும்?

பதில்:

அரசு வேலைக்கு முக்கிய காரண கிரகமான சூரியன் பனிரெண்டில் மறைந்திருக்கிறார். அடுத்த வருடம் பத்தாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவின் தசை ஆரம்பிக்க உள்ளதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ராகுவிற்கு அடுத்து லக்னத்தில் உள்ள குருவின் தசை ஆரம்பிக்க உள்ளதால் எதிர்காலத்தில் வசதி வாய்ப்புகளோடு நன்றாகவே இருப்பாய்.

எஸ். சந்திரமோகன், பழனி.

கேள்வி:

எனக்கு சமீபகாலமாக ஜோதிடம், ஆங்கிலம், உடற்பயிற்சி இவற்றின் மேல் ஆர்வம் வந்தது ஏன்? இத்தனை வயதாகியும் நிரந்தர தொழில் வருமானம் இல்லை. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. வாழ்க்கைத் துணை எப்படி இருக்கும்? எதிர்காலம் எப்படி?

பதில்:
6-10-1981 காலை 10-15 பழனி செவ் ரா
 கே
சந் ல சுக்  பு குரு சூ சனி

ஒருவருக்கு செவ்வாய் தசை நடைபெறும்போது உடற்பயிற்சியின் மீது ஆர்வமும், ராகுதசை அல்லது புக்தி நடைபெறும்போது அந்நிய மொழி கற்றலும், ஜோதிட ஈடுபாடும் வரும் என்பதை மாலைமலர் ஜோதிட விளக்கக் கட்டுரைகளில் எழுதி இருக்கிறேனே...

உங்களுக்கு விருச்சிக லக்னமாகி லக்னாதிபதி செவ்வாய் நீசம் பெற்று ராகுவுடன் இணைந்து தற்போது ஏழு வருடங்களாக தசை நடத்திக் கொண்டிருப்பதால் சமீபமாக ஒரு மூன்று வருடங்களாக உடற்பயிற்சியின் மீது தீவிர ஆர்வம் கொண்டு செய்து கொண்டிருப்பீர்கள். செவ்வாய் நீசம் என்பதால் அதில் முழுமை இருக்காது.

செவ்வாயுடன் ராகு இருபத்தி மூன்று டிகிரி இடைவெளியில் இணைந்திருப்பதால், அந்நிய மொழியான ஆங்கிலத்தின் மீதும், ஜோதிடத்தின் மீதும் ஆர்வம் வந்திருக்கிறது. அடுத்த வருடம் ராகுதசை ஆரம்பிக்க உள்ளதால் இது நீடிக்கும். போகப்போக ஜோதிடத்தின் மீது பற்று அதிகமாகும். அப்படி என்ன இதில் இருக்கிறது என்று ஆராய ஆரம்பிப்பீர்கள்.

ஜென்மச்சனி நடக்கப் போவதால் நீங்கள் வாழ்கையில் செட்டில் ஆக இன்னும் மூன்று வருடங்கள் ஆகும். ராகுதசை, குருபுக்தியில் தகப்பன் ஆனபிறகு வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஏழாம் வீட்டை இரண்டு சுபர்களும் பார்ப்பதால் புரிந்து கொள்ளும் அனுசரணையான மனைவி அமைவாள். எதிர்காலம் கவலைப் படும்படி இருக்காது.

மகள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள்?

எம்பாஸ்கரன், சென்னை - 62.

கேள்வி:

குடும்ப பிரச்னைகளால் மனைவி, குழந்தைகளை பிரிந்திருந்த வேளையில் தலையில் இடி விழுந்தது போல 17 வயது மூத்த பெண் தற்கொலை செய்து கொண்டாள். இன்று இல்லை என்றாலும் ஒருநாள் குடும்பத்துடன் சேரலாம் என்று நினைத்திருந்த எனக்கு என் பெண்ணின் தற்கொலையை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. என் உயிரையும் எடுத்துக் கொள் இறைவா என்று ஒவ்வொரு நாளும் கடவுளை வேண்டுகிறேன். என் பெண் எதற்காக அந்த முடிவை எடுத்தாள் என்றும் புரியவில்லை. இறைவன் என்னையும் விரைவில் எடுத்துக் கொள்வாரா என்பதை தெரிவிக்கும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:
பு,குரு செவ் ல சூ சுக் ரா 
சனி 28-5-1964, காலை 6.10, சென்னை
சந் கே

விருச்சிக ராசி இருக்கும் வீடு கடந்த சில வருடங்களாகவே நிம்மதி இல்லாமல் இருக்கிறது என்பதை வாரந்தோறும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். இறந்து போன மகளுக்கு கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி என்பதன்படியும், உங்களின் ஜாதகப்படியும் 2011 ஜூலை முதலே உங்களுக்கு தீவிரமான சிக்கல்கள் ஆரம்பித்து விட்டன.

மகளின் ஜாதகத்தில் சுக்கிரன், சூரியன், சந்திரன், சனி என நான்கு கிரகங்கள் நீச அமைப்பில் இருக்கிறார்கள். லக்னாதிபதியும், ஆயுள்காரகனுமான சனியும் ஆயுளைக் குறிக்கும் எட்டுக்குடையவனுமான சூரியனும் நீசமடைந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள். சரியாக 17 வயதில் பாதகாதிபதி செவ்வாயைப் போல செயல்படக்கூடிய கேதுவின் தசை நடந்ததால் சனியின் தாக்கத்தால் மகள் இறந்து விட்டார்.

லக்னத்தில் ராகு-கேதுக்கள் பாபத்துவ அமைப்பில் இருந்தால் தற்கொலை முடிவை எடுக்க வைப்பார்கள் என்பதையும் ஜோதிடம் எனும் தேவ ரகசியம் கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். தற்போது கேட்டையில் சனி சென்று கொண்டிருப்பதால் விருச்சிக ராசியிலும் கேட்டை நட்சத்திரம் கடந்த இரண்டு வருடங்களாக அதிகமான பாதிப்பில் இருக்கிறது.

உங்கள் ஜாதகப்படியும், ராகு சுக்கிரனுடன் இணைந்து, மாரகாதிபதி சந்திரனின் பார்வையைப் பெற்றதால் நீங்கள் அதிகம் நேசித்த பெண்ணான மகளின் மூலமாக துயரம் நேர்ந்தது. குருபகவான் அஷ்டமாதிபதி என்பதாலும், குருவுடன் புத்திர ஸ்தானாதிபதியான புதன் பனிரெண்டில் மறைந்திருப்பதாலும் ராகு தசை குரு புக்தியில் புத்திர சோகம் ஏற்பட்டது. ஜாதகப்படி படிப்படியாக இன்னும் இரண்டு வருடங்களில் சகஜமான வாழ்க்கைக்கு திரும்புவீர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *