adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 153 (19.9.2017)

ஜெ.லோகநாதன், திருச்சி - 3.

கேள்வி:

ராகுவைப் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை எனக்கு நூற்றுக்கு நூறு பொருந்துவது ஆச்சரியமாக உள்ளது. உங்களின் கணிப்புகளை என் தற்கால வாழ்க்கையோடு ஒப்பிடும் போது மிகவும் சரியாக இருக்கிறது. 2006-ம் ஆண்டு ஜூன் முதல் வெளிநாடு சென்று கடினமான வேலைகளைச் செய்தேன். 2013 டிசம்பர் ஆட்குறைப்பு நடவடிக்கையால் தாயகம் திரும்பினேன். அன்றிலிருந்து இன்றுவரை ஒரு ரூபாய் கூட வருவாய் இல்லை. சேமிப்பு எல்லாம் கரைந்து தற்சமயம் மாமனார் வீட்டில் இருக்கிறேன். தொழில் ஏதாவது செய்யலாம் என்றால் ஒரே தடைகளும், நஷ்டங்களுமாக உள்ளது. கொடுத்த கடனும் திரும்ப வரவில்லை. பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் கூட கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறேன். எனக்கு ஏன் தொடர்தோல்வியும், வறுமையும்? எப்போது விடிவு காலம்? எதிர்காலம் எப்படி இருக்கும்?

சனி சந் ராகு சுக்,செவ் குரு
9.8.1966 7.10Am கடலூர்  சூரி புத
 லக்
 கேது
பதில்:

ராகுதசையில் வெளிநாட்டைக் குறிக்கும் எட்டாம் அதிபதியான குருவின் புக்தியில் வெளிநாடு சென்றீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு விருச்சிகமோ, துலாமோ இருக்கும் என்று கணிக்கிறேன். 2015-ம் ஆண்டு முதல் அஷ்டமச்சனி ஆரம்பித்து விட்டதால் அனைத்து வேலை, தொழில் முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டன.

ராகுதசையில் சுக்கிரபுக்தி நடக்கும் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை மட்டுமே உங்களுக்கு வருமானம் இல்லாத நிலைமை இருக்கும். சூரியன் 12-ல் இருப்பதால் அடுத்த வருட ஆரம்பத்தில் மீண்டும் வெளிநாடு செல்ல முடியும். முயற்சிகளை ஆரம்பியுங்கள். இம்முறை நல்ல வேலை கிடைத்து சிக்கல்களை தீர்த்துக் கொள்வீர்கள்.

சூரியபுக்தி முதல் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். அதன் பிறகு வருமானம் இல்லாமல் இருக்க மாட்டீர்கள். அடுத்து நடக்க இருக்கும் குருதசை லக்னத்திற்கு ஐந்து, ராசிக்கு ஒன்பதிற்கு உடையவனாகி ராசி, லக்னத்தின் ஐந்து, ஒன்பதாமிடங்களைப் பார்ப்பதால் பெரிய யோகத்தை செய்யும். குருதசை முதல் எவ்வித கஷ்டங்களும் இன்றி நிம்மதியாக இருப்பீர்கள்.

ரேவதி, சென்னை.

கேள்வி:

திருமணமாகி சட்டப்படி கணவரை பிரிந்து விட்டேன். தாய்-தந்தை கிடையாது. அண்ணன் அல்லது தங்கை வழியில் உதவி கிடைக்குமா? ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் உள்ளதா? இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா? தாலி கட்டி வாழலாமா? அல்லது சேர்ந்து வாழலாமா? என்பதை தெரியப் படுத்தும்படி கேட்டு கொள்கிறேன்.

சுக்
20.8.1980 10.10Am சென்னை  புத ராகு
கேது சூரி குரு
சந்  லக் செவ்  சனி
பதில்:

கேட்டை நட்சத்திரமாகி உன்னுடைய நட்சத்திரத்திலேயே சனி சென்று கொண்டிருப்பதால் இப்படி புத்தி இல்லாததனமாக கேள்விகளைக் கேட்கிறாய். 2013-ம் வருடம் ஆரம்பம் முதல் நடந்த சுக்கிரதசை, குருபுக்தியில் உன்னுடைய புத்தி கெட்டு விட்டது. ஒரு பெண் செய்யக் கூடாத அனைத்துத் தவறுகளையும் செய்திருப்பாய். எல்லாம் ஏழரைச் சனியின் வேலை.

வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கும் புதன் புக்தியில் இருந்து உன் புத்தி தெளியும். சில நல்ல விஷயங்கள் நடக்கும். வாழ்க்கையைத் தொலைத்து விடாதே. ஏழாமிடம் செவ்வாய் பார்வையால் கெட்டு, 11-மிடம் ஆட்சி பெற்ற சூரியனும், குருவும் அமர்ந்து சுபத்துவமானதால் உனக்கு அடுத்த வருடம் நேர்மையான முறையில் இரண்டாவது வாழ்க்கைத்துணை அமையும். எதற்கும் அவசரப்படாதே.

இப்போது இருக்கும் நட்பை விட்டு அடுத்த வருடம் ஆரம்பத்தில் விலகுவாய். 11-க்குடையவன் ஆட்சியாகி, 3-க்குடையவன் மூன்றாம் இடத்தை பார்த்து குரு, சுக்கிர இருவரும் இளைய சகோதர ஸ்தானமான மூன்றைப் பார்ப்பதால் அண்ணன், தங்கை இருவருமே உனக்கு உதவுவார்கள்.

குறிப்பாக உன் தங்கை அதிகமாகச் செய்வாள். நீதான் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அவர்களுக்கு தொல்லை கொடுத்திருப்பாய். நவம்பர் மாதத்திற்கு பிறகு ஒருமுறை ரத்தம் சம்மந்தமுள்ள உறவினர்கள் யாருடனாவது ஶ்ரீரங்கத்திற்கும், கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூருக்கும் சென்று வழிபட்டு வா. நல்ல வாழ்க்கைக்கான வழி பிறக்கும்.

ரகுராஜன், மதுரை.

கேள்வி:

சமீபகாலமாக எனக்கும், என் மனைவிக்கும் பிரச்சினை அதிகமாக உள்ளது. நான் சுயதொழில் செய்து வருகிறேன். மனைவி அரசாங்க ஊழியர். அவள் என்னை மதிப்பது இல்லை. ஏட்டிக்கு போட்டி செய்கிறாள். வேலைக்கு செல்லும் முன் சரியாக இருந்தவள் இப்போது மாறி விட்டாள். அவள் என்னை மதிக்காததால் பிள்ளைகளும் மதிப்பது இல்லை. பிள்ளைகளிடம் எனக்கு எதிராக சொல்லி கொடுக்கிறாள். நமது தொழில் நன்றாக நடக்கிறது. நீ வேலைக்குப் போக வேண்டாம் என்று சொன்னால் வேலைக்குத்தான் போவேன் என்று சொல்கிறாள். தொழிலில் உதவிக்கு ஆள் இல்லாமல் நான் கஷ்டப்படுகிறேன். ஜோதிடர்கள் எனக்கு இரண்டு தாரம் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? அப்படியானால் எந்த வயதில் அது ஏற்படும்? எப்போதும் எனக்கு பயம், பதட்டம், படபடப்பாகவே உள்ளது. மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். தயவுசெய்து நல்ல வழிகாட்டும்படி தங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

குரு புத செவ் லக்,சூரி சுக்,ராகு
சனி 20.6.1964 7.03Am பட்டுக்கோட்டை
கேது  சந்த
பதில்:

“அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்தெட்டு அருவாள்” என்று கிராமங்களில் சொல்வார்கள். ஒரு பெண்டாட்டியையே புரிந்து கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை. இதில் ஜோதிடர் சொன்னார் என்று இரண்டாம் திருமணம் நடக்குமா என்று கேள்வி வேறு கேட்கிறீர்கள்.

உங்களுடைய நிலையில்லாத சுயதொழிலை நம்பி, நிரந்தரமான அரசு வேலையை எந்த ஒரு புத்திசாலிப் பெண்ணும் விட மாட்டாள். உங்கள் மனைவி அறிவுள்ளவளாக இருப்பதால்தான் வேலையை விடவில்லை. ஜாதகப்படி லக்னாதிபதி புதன் பனிரெண்டில் மறைந்து ஆறுக்குடைய செவ்வாயுடன் இணைந்த நிலையில் இருக்கும் போது, மனைவியைக் குறிக்கும் ஏழுக்குடைய குரு  ஏழாமிடத்தைப் பார்த்து, ராசிக்கு ஏழிலும் குரு இருப்பதால் உங்களை விட உங்கள் மனைவி புத்திசாலி. பொறுப்பானவள், குடும்பத்தை சீராக கொண்டு போகத் தெரிந்தவள்.

இதுபோன்ற ஜாதக அமைப்பைக் கொண்டவர்கள் மனைவியின் சொல்லைக் கேட்டு அவளுடைய அறிவுரைப்படி நடந்து கொள்வது குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நல்லது. மனைவியின் பேச்சைக் கேட்பதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது. குடும்பமும் நன்றாக இருக்கும். பிள்ளைகளிடமும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

2011 முதல் ஆறுக்குடைய செவ்வாயுடன் இணைந்து, ஆறாமிடத்தைப் பார்க்கும் லக்னாதிபதி புதனின் தசை நடப்பதால் எப்பொழுதும் மனப் பதட்டத்துடன் இருப்பீர்கள். தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். புதனுக்குரிய முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். ஏழரைச்சனி முடிவடைவதால் இனிமேல் நிலைமைகள் நல்லபடியாக மாறும். ஏழாமிடம் வலுத்து பதினொன்றுக்குடையவன் பனிரெண்டில் மறைவதால் இந்த ஜென்மத்தில் இந்த ஒரு மனைவிதான்.

ஜெ.ஆர்.சவுந்தரராஜன், ஊர் பெயர் இல்லை.

கேள்வி:

தொழில் மாற்றிக் கொள்ளலாமா? அல்லது இருக்கும் இடமே போதுமா? தற்போது ஜவுளிக்கடையில் வேலையில் இருக்கிறேன்.

குரு 24.11.1962 9.15Am மதுரை செவ் ராகு
சனி கேது
லக் சூரி புத சந் சுக்
பதில்:

ஏழரைச்சனி முடியப் போவதாலும், நாற்பது நாட்களுக்கு முன் ஜீவன ஸ்தானாதிபதியான புதனின் தசை ஆரம்பித்துள்ளதாலும் உங்களுக்கு இப்போது மாற்றம் இருக்கும். முதல் இரண்டு வருடங்களுக்கு சுமாரான பலனை புதன்தசை கொடுத்தாலும் 2020-ல் இருந்து தொழில்ரீதியாக நன்றாக இருப்பீர்கள்.

க. சண்முகவடிவு முதுகுளத்தூர்

கேள்வி

போகாத கோவில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. காசி முதல் ராமேஸ்வரம் வரை ஜோதிடர்கள் சொன்ன எல்லாப் பரிகாரங்களையும் செய்தாகி விட்டது. உங்கள் ஒருவரைத்தான் இன்னும் பார்க்கவில்லை. என் பெண்ணிற்கு திருமணம் நடக்குமா நடக்காதா? எல்லா வசதிகளும் இருந்தும் பருவத்தில் திருமணம் செய்ய முடியாமல் போவது ஏன்? வீட்டில் எனக்கும் கணவருக்கும் தூக்கமே இல்லை. எதையாவது குடித்து விட்டு சாகலாமா என்று இருவருமே யோசிக்கிறோம். என் பெண்ணிற்கு அப்படி என்ன தோஷம் இருக்கிறது?

பதில்:

ராசிக்கு இரண்டிலும் அதுவே லக்னத்திற்கு எட்டிலுமாக செவ்வாய், சனி சேர்ந்திருப்பதும், ஏழுக்குடையவனும் சுக்கிரனும் ராகுவுடன் மிக நெருங்கி இணைந்திருப்பதும் கடுமையான தோஷம். இதுபோன்ற அமைப்பிற்கு முப்பத்து மூன்று வயதில் திருமணம் அமைவதே நல்லது.

எல்லாக் கோவில்களையும் லிஸ்ட் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள் சரி. எங்கு போக வேண்டுமோ அங்கே போகவில்லையே. உங்கள் கணவரின் ஜென்ம நட்சத்திரம் அன்று முதல் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே ஸ்ரீகாளஹஸ்தி சென்று தங்கி அதிகாலை ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் திருமணம் நடக்கும். மாப்பிள்ளை கொஞ்சம் தூரத்துச் சொந்தமான தெரிந்தவர்தான்.

பெண்களிடம் பேசவே கூச்சமாக இருக்கிறது.

பி.ரமேஷ்கிருஷ்ணன், சேலம்.

கேள்வி:

உங்களுடைய கட்டுரைகளை தவறாமல் படித்து வரும் தீவிர ரசிகன் நான். சிறுவயது முதலே வீட்டில் கடன் பிரச்சினை இருந்து வருகிறது. பரம்பரை சொத்துகளை விற்று கடனை அடைத்தாலும் முழுவதும் தீரவில்லை. வெளிநாடு சென்றால் கடனை அடைக்கலாம் என்று ஒரு வருடமாக முயற்சி செய்கிறேன். சிறு முன்னேற்றம் கூட இல்லை. பெண்களிடம் பேசவே கூச்சமாக இருக்கிறது. திருமணத்தை நினைத்தால் ஒருவித அச்சம் தொற்றிக் கொள்கிறது. வெளிநாடு செல்ல முடியுமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். அடிக்கடி பொதுச்சேவை செய்வது போல கனவு வருகிறது. இது மன பிரம்மையா? அல்லது எதிர்காலமா என்று தாங்கள்தான் இந்த சிஷ்யனுக்கு உணர்த்த வேண்டும்.

லக் சுக் சந் செவ்
சூரி புத 21.2.1991 8.45Am ஆத்தூர் குரு கேது
சனி ராகு
பதில்:

ஒரு ஜாதகத்தில் ஆறு, எட்டுக்குடையவர்கள் வலுத்தாலே கடன் தொல்லைகள் இருக்கும். உன்னுடைய ஆறாம் அதிபதி சூரியன் அவருடைய ஆறாம் வீட்டையே பார்ப்பதால் உனக்கு எதாவது ஒரு வகையில் கடன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நடக்கும் ராகுதசை, குருபுக்தி முடிந்த பிறகு சனிபுக்தியில் வெளிநாடு செல்ல முடியும்.

லக்னாதிபதி குரு உச்சமானதால் கொஞ்சம் நல்லவனாக இருப்பாய். நல்ல குணம் உள்ளவனுக்கு பெண்களிடம் பேச கூச்சம் இருக்கத்தான் செய்யும். கல்யாணம் வரை நீ பவித்திரமாக, பத்திரமாக இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. ஆகவே உன்னால் திருமணத்திற்கு முன் எந்த பெண்ணிடமும் பழக முடியாது.

சுக்கிரன் உச்சமாகி ஏழாமிடத்தைப் பார்ப்பதால் திருமணத்திற்கு பின்பே மனைவியைக் காதலிப்பாய். பெண்சுகம் கிடைத்த பின்புதான் பெண்களிடம் பேசும் தைரியம் உனக்கு வரும். ராகுதசை, புதன்புக்தியில் திருமணம் நடக்கும் வரை பொறுமையாக இரு. சிம்மம் வலுவாகி லக்னாதிபதி உச்சபங்கம் ஆனதால் பொது சேவை பற்றிய எண்ணங்கள் வருகின்றன. குருதசையில் அதற்கான சந்தர்ப்பங்கள் வரும். இப்போது இல்லை.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 153 (19.9.2017)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *