adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 152 (11.9.2017)

மு.சக்திவேல், நாமக்கல்.

கேள்வி:

வேத ஒளிச்சுடருக்கு வணக்கம். இறைவன் முன்பு மட்டும் சிரம் கவிழ்ந்து வாழ்ந்த நான் இன்று பலர் முன்பு தலைகுனிந்து வாழும் நிலையில் இருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக படிப்படியாக கீழ்மை அடைந்தேன். சொத்து, பணம், நகை எதுவும் இல்லை. பருவம் வந்த மூன்று பெண் குழந்தைகள் மட்டும் இருக்கின்றார்கள். என்னிடம் பசிக்கு பணம் வாங்கி உணவு உண்டவர்கள் இன்று விருந்து நிகழ்ச்சியில் என் குடும்பத்தை ஒரு மணி நேரம் கழித்து வா சாப்பிடலாம் என்று சொல்லும் நிலை இருக்கிறது. அவர்கள் முன்பு மீண்டும் நிலை பெறுவேனா? எனக்கும் இறைவன் சிறிதளவு ஜோதிடம் பார்க்க அருளியுள்ளார். ஜோதிடம் பார்க்கும் அமைப்பு எனக்கு உண்டா? பார்க்கலாமா? பெண் குழந்தைகளின் வாழ்வு எப்படி இருக்கும்? மீண்டும் நல்வாழ்வு வாழ்வேனா? மறுபடியும் தெய்வத் திருப்பணி செய்ய முடியுமா?

 சனி கேது
3.30Am 10.11.1972 நாமக்கல்
 சந்,ராகு குரு புத  சூரி செவ் லக் சுக்
பதில்:
கன்னிலக்னம், தனுசுராசியில் பிறந்திருப்பதால் ஓரளவு ஜோதிடஅறிவு இருக்கத்தான் செய்யும். கன்னிககு 8-க்குடைய செவ்வாயின் தசை கடுமையான சாதகமற்ற பலன்களைச் செய்யும் என்று அடிக்கடி எழுதி வருகிறேன். அதிலும் தனஸ்தானம் எனப்படும் 2-ம் வீட்டில் விரயாதிபதியுடன் அமர்ந்து தனது எட்டாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும் பார்க்கும் செவ்வாய் ஒரு மனிதனின் தனம் அத்தனையும் விரயம் செய்வார். தற்போது நடந்து கொண்டிருக்கும் செவ்வாய் தசை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் என்பதால் அடுத்து நடக்க இருக்கும் ராகு தசை முதல் உங்களுடைய வாழ்க்கை மீண்டும் செழிப்பானதாக மாறும். ராகு சுபரின் வீட்டில் இரண்டு சுபர்களுடன் அமர்ந்து பாக்கியாதிபதியின் சாரம் பெற்று இருப்பதால் அந்தஸ்து கவுரவத்தை மறுபடியும் கொடுப்பார். ஏற்கனவே இருந்த நிலையை விட மிகவும் நல்ல நிலையில் இருப்பீர்கள். ராகு தசையில் ஜோதிட அறிவு இன்னும் வளரும். ஜோதிடம் பார்க்க முடியும். குழந்தைகளின் ஜாதகங்களில் லக்னாதிபதி வலுப் பெற்று இருப்பதாலும் உங்கள் ஜாதகத்தில் குரு ஆட்சி பெற்றிருப்பதாலும் உங்களின் பெண் பிள்ளைகள் சுகமான வாழ்வு வாழ்வார்கள். ராகு புத்திரக் காரகனாகிய குருவுடன் இணைந்து தசை நடத்தவுள்ளதால், ராகுதசையில் பெண்களுக்கான கடமைகளை முழுமையாக செய்ய முடியும். அவர்கள் நன்றாக இருப்பதையும் பார்க்க முடியும். மூல நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் தெய்வப்பணி செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். இன்னும் இரண்டு வருடம் பொறுத்திருங்கள். கோ.பாலாஜி, திருச்சி.
கேள்வி:
ஆறில் நிற்கும் சூரியன் அரசு வேலையை அலைக்கழித்துத்தான் தருவார் என்று சொல்கிறார்கள். அதுபோக திதி, சூன்யப்பட்டு 2, 5-ம் பாவங்கள் வலுக் குறைந்திருக்கிறது. நான் அரசுப்பணிக்கான தேர்வு எழுதலாமா? எப்போது கிடைக்கும்?
சந் பு சூ  சுக்,கே செவ்
7.33pm 10.5.1991 புதுக்கோட்டை குரு
சனி
 ரா  ல
பதில்:
லக்னத்திற்கு பத்துக்குடையவனும், ராசிக்கு பத்துக்குடையவனும் உச்சம் பெற்றதால் உறுதியாக அரசு வேலை கிடைக்கும். திதி, சூன்யத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. உச்சம் பெற்ற குரு லக்னத்தையும், ராசியையும் பார்ப்பது ஒரு யோகம். ஆயினும், விருச்சிக லக்னத்திற்கு அவயோகம் செய்யும் அஷ்டமாதிபதி புதனின் தசை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தசை முடியும் தருவாயில்தான் அரசு வேலை கிடைக்கும். .கிரிபிரசாத், சென்னை-97.
கேள்வி:
ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறேன். மிகச் சிறிய வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம். அப்பா தேநீர் கடை வைத்துள்ளார். அவருக்கு வயதாகி விட்டதால் நான் நடத்தலாமா? எனக்கு மிகவும் அதிகமாக கோபம் வருகிறது. இதனால் டீக்கடைத் தொழில் உனக்கு சரி வராது என்று குடும்பத்தினர் சொல்கிறார்கள். கடை எனக்கு வளர்ச்சி கொடுக்குமா? அல்லது டிரைவர் தொழில் மட்டும்தானா? மாற்றாக இப்போது வேலைக்கு சென்று கொண்டிருக்கும் மனைவி தேநீர் கடையை நடத்தலாமா? எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?
லக் 3.40Pm 9.10.1981 சென்னை  செவ் ராகு
 சந்த கேது
சுக் புத  சூரி,சனி குரு
பதில்:
(கும்ப லக்னம். மகர ராசி. 6-ல் செவ், ராகு. 8-ல் சூரி, குரு, சனி. 9-ல் புத. 10-ல் சுக். 12-ல் சந், கேது. 9-10-1981, மதியம் 3.40, சென்னை) பாபவலுப் பெற்ற செவ்வாய் லக்னம், ராசியோடு தொடர்பு கொண்டால் ஒருவருக்கு கோபம் மிக அதிகமாக வரும் என்பது ஜோதிட விதி. அதோடு அந்த நபர் முன் யோசனை இல்லாமல் எதையாவது செய்துவிட்டு பிற்பாடு யோசிக்கும் குணம் உள்ளவராக இருப்பார். உன்னுடைய ஜாதகப்படி 6-ல் நீசமான செவ்வாய் தன்னுடைய ஏழாம் பார்வையால் ராசியையும், எட்டாம் பார்வையால் லக்னத்தையும் ஒரு சேரப் பார்ப்பதால் உனக்கு கோபம் அதிகமாக வருகிறது. இந்த அமைப்பு அடுத்து நடக்க இருக்கும் சனிதசை முதல் மாற்றம் அடையும். தொழில் ஸ்தானாதிபதி நெருப்புக் கிரகமான செவ்வாய் ஆகி, பத்தாமிடத்தில் சுக்கிரன் இருப்பதால் டீக்கடைத் தொழில் உனக்கு பொருத்தமானதுதான். ஆனால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு செய்ய வேண்டாம். 2020-ல் ஆரம்பிக்க இருக்கும் லக்னாதிபதி சனி தசையில் உனக்கு மாற்றங்கள் உண்டு. அதுவரை பொறுமையாக இரு. மனைவிக்கு ரிஷப ராசியாகி அஷ்டமச்சனி ஆரம்பிக்க உள்ளதால் தானாக வேலையை விடக் கூடாது. அவருக்கும் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துத்தான் நல்ல அமைப்புகள் உருவாவதால் தந்தையின் தொழிலை 2020 முதல் ஏற்று நடத்தினால் சிறப்பான எதிர்காலம் உண்டு. .கார்த்திகேயன், வேலூர் – 7.
கேள்வி:
அரசுப்பணியில் இருக்கிறேன். இதில் இருந்து கொண்டே அரசாங்கத்தில் ஒரு உயர்ந்த பதவிக்காக முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். அந்தப் பதவி புரமோஷனால் வரக் கூடியது அல்ல. ஜாதகப்படி அந்த உயர்வு கிடைக்குமா என்பதை ஆராய்ந்து கூறும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சனி  சந்த ராகு புத
7.00Am 30.7.1967 ஆம்பூர்  லக்,சூரி குரு
சுக்
 செவ் கேது
பதில்:
அரசுப் பணியைக் குறிக்கும் கிரகமான சூரியன் உச்ச குருவுடன் இணைந்து சுபத்துவமாகி, சந்திரனுக்கு கேந்திரத்தில் அமர்ந்து, ராசிக்குப் பத்தோடு தொடர்பு கொள்வதாலும், சிம்மம் சுக்கிரனின் இருப்பினால் வலுவானதாலும், லக்னம், ராசிக்குப் பத்தாமிடங்கள் பலமாக இருப்பதாலும் அரசு வேலையில் இருக்கிறீர்கள். ஜாதகம் யோகமாக இருப்பதாலும், ராசிக்குப் பத்தைப் பார்க்கும் உச்ச குருவின் தசை இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடக்க இருப்பதாலும், ராகுதசை செவ்வாய் புக்தியில் நீங்கள் கேட்கும் உயர்ந்த பதவி கிடைக்கும். வாழ்த்துக்கள். ஆர். பாலகிருஷ்ணன் கோவை
கேள்வி:
குருநாதரின் திருவடிகளுக்கு கோடானுகோடி வணக்கங்கள். சொந்தமாக பானிபூரி கடை வைத்திருந்தேன். ஏழரைச் சனி ஆரம்பித்ததும் கடை நடத்த முடியாமல் போய்விட்டது. தற்போது ஒரு பானிபூரி கடைக்கு வேலைக்குப் போகிறேன். சோதனை மேல் சோதனை. வெளியே கடன் வாங்கி ஒருவருக்கு கடன் கொடுத்தேன். மானம், மரியாதை எல்லாம் போய்விட்டது. இழந்த தொழில் மீண்டும் வருமா? கூட்டுக் குடும்பத்திலும் கடும் பிரச்னை. தனியாகப் போகலாமா? வாழவே விருப்பம் இல்லை. இந்த சூழ்நிலையை எப்படி எதிர் கொள்வது என்றும் தெரியவில்லை. தாங்கள்தான் தக்க பரிகாரங்களைச் சொல்லி எனக்கு வழிகாட்ட வேண்டும்?
 லக்  சனி புத  சூரி செவ்
 ராகு 0.40Am 20.6.1970 கோவை  சுக்
 கேது
 சந்  குரு
பதில்:
2015ம் ஆண்டு முதல் பனிரெண்டில் அமர்ந்த ராகுவின் தசை ஆரம்பித்திருக்கிறது. ராகுவிற்கு வீடு கொடுத்த சனி நீசம் பெற்றிருப்பதால் ராகு முதலில் கொஞ்சம் சோதனைகளைக் கொடுத்து பிறகுதான் நன்மைகளைச் செய்வார். எவர் ஒருவருக்கும் ராகுதசை அளப்பரிய நன்மைகளைச் செய்ய வேண்டுமென்றால் அவருக்கு வீடு கொடுத்த கிரகம் பலமாக இருக்க வேண்டும். உங்களுக்கும் ஒரு மகளுக்கும் தனுசு ராசியாகி ஏழரைச் சனி நடப்பதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு இப்போது பார்க்கும் வேலைக்குப் போங்கள். சொந்தத் தொழில் வேண்டாம். அடுத்த வருடம் ராகுதசை சுயபுக்தி முடிந்ததும், இப்போதிருக்கும் கடன், குடும்பச் சிக்கல்கள் ஒரு முடிவிற்கு வரும். ராகுவிற்கு குருபார்வை இருப்பதால் பெரிய கெடுதல்கள் எதுவும் வராது. சாப்பாடு, துணிமணிக்கு குறைவில்லாமல் வண்டி ஓடும். ராகுதசை முடியும் வரை வருடம் ஒருமுறை ஸ்ரீகாளஹஸ்தி சென்று காளத்திநாதனை தரிசித்து வாருங்கள்.
எனது நோய்கள் எப்போது தீரும்?
வாசன், மதுரை.
கேள்வி:
எனக்கு ஆசனவாயில் கட்டிகள் உள்ளன. என்ன கட்டி என்று தெரியவில்லை. புற்றுநோய்க் கட்டியோ என்று பயமாக உள்ளது. நரம்புத் தளர்ச்சியும், பாலியல் நோய்களும் உள்ளது. இவை அனைத்துமே 18 வருடமாக நடந்த ராகு தசையில் வந்தன. ராகு என்னை பாடாய் படுத்தி விட்டார். இரண்டுமுறை விபத்தும் ஏற்பட்டு அதில் நான் உயிரிழக்க வேண்டியது. எப்படியோ தப்பித்து விட்டேன். செவ்வாய் சனியைப் பார்ப்பதால் மரணம், விபத்து கண்டம் என்று ஜோதிடர் ஒருவர் சொல்கிறார். உண்மையா? இதனால் வாகனம் ஓட்டவே பயமாக இருக்கிறது. என் உடம்பில் ஏற்பட்டுள்ள நோய்கள் எப்போது குணமாகும்? என் பெற்றோர் என்னை நான்கு லட்சம் செலவு செய்து பி.இ. சிவில் படிக்க வைத்தனர். படிப்பு முடிந்து இரண்டரை வருடமாகிறது. ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லை. போகும் இடம் எல்லாம் தோல்வி, தடை உள்ளது. இது எப்போது மாறும்? எனக்கு வேலை எப்போது கிடைக்கும்? நல்லகாலம் எப்போது பிறக்கும்? என் ஜாதகம் அவயோக ஜாதகமா? 
 சுக் புத சூரி  லக் கேது
 சனி 8.10Am 16.4.1993 மதுரை செவ்
சந்
ராகு  குரு
பதில்:

தான் செய்யும் அனைத்திற்கும் வேறொன்றின் மீது பழி போடுவது மனித சுபாவம். “காலில் என்ன அடி?” என்று கேட்டால் “மேஜை இடித்து விட்டது.” என்றுதான் சொல்லுவோமே தவிர நாம்தான் மேஜையில் போய் இடித்துக் கொண்டோம் என்று ஒத்துக் கொள்ள மாட்டோம்.

நான்கு லட்ச ரூபாய் செலவு செய்து பெற்றோர்கள் என்னைப் படிக்க வைத்தார்கள் என்பதை இப்போது உணரும் நீ, உன் இருபது வயதில் ராகுதசை நடக்கும்போது பால்வினை நோய் வந்ததற்கான செயல்களைச் செய்வதற்கு முன்பாக அல்லவா இதை யோசித்திருக்க வேண்டும்? செய்வதைச் செய்து விட்டு பிறகு ராகுதசை இப்படிச் செய்து விட்டது, ஜாதகம் அப்படி இருக்கிறது என்று ஜோதிடத்தின் மீது பழியைப் போடுவது நன்றாகவா இருக்கிறது?

ஜோதிடம் என்பது ஓரளவுக்கு வருவதை முன்பே உணர்த்தக் கூடிய ஒரு காலக் கண்ணாடி. இது போன்ற ஒரு கெடுதல் உனக்கு வரப்போகிறது. இதிலிருந்து புலன், மனம் இரண்டையும் அடக்கி உன்னைத் தற்காத்துக் கொள் என்று முன்பே உணர்த்துவதுதான் இதன் அடிப்படை. ஓரளவு ஜோதிட ஆர்வமும், அறிவும் உள்ளவர்களுக்கு இதுதான் இறையின் மூலம் முன்பே உணர்த்தப்படுகிறது.

உன்னுடைய ஜாதகப்படி ஆறுக்குடைய சுக்கிரன் அந்த இடத்திற்கு ஆறாம் பாவத்தில் மறைந்து வலிமை பெற்றுள்ளதாலும், பதினொன்றாம் பாவாதிபதி அந்த வீட்டைப் பார்ப்பதாலும் புற்றுநோய் போன்ற பெரிய வியாதிகள் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒருவருக்கு உயிர் பறிக்கும் வியாதிகள் வரவேண்டும் என்றால் ஆறாம் பாவம் பாபவலு பெற்றிருக்க வேண்டும்.

நடைபெறும் குருதசையின் முதல் எட்டு வருடங்கள் தனது எட்டாம் வீட்டுப் பலனையே குரு வலுவாகச் செய்வார் என்பதாலும், உன் மகர ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பிக்க உள்ளதாலும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு உனக்கு நோய் உள்ளிட்ட சாதகமற்ற பலன்கள் இருக்கும். அதன் பிறகு இவைகள் இருக்காது. லக்னாதிபதி சுக்கிரன் உச்சமானாலும் வக்கிரமாகி இருப்பது பலவீனம் என்பதால் முப்பது வயதிற்குப் பிறகே வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும்.

அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஒரு சிறிய வேலை கிடைக்கும். அதை விட்டு விடாமல் சேர்ந்து கொண்டு அதில் இருந்து முன்னேறத் துவங்கு. சனி, செவ்வாய் இருவரும் பாபத்துவ வலிமையில் நேருக்குநேர் பார்த்துக் கொண்டு தசை நடத்தும் போதுதான் கண்டம் உண்டு. உனக்கு அந்த அமைப்பு இல்லை.  உன் ஜாதகம் யோக ஜாதகம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *