எஸ். சந்திரன், திருவொற்றியூர்.
கேள்வி :
சூ பு | சுக் | ||
ராசி | |||
கே | செவ்,சனி குரு,ரா | ||
சந் | ல |
பதில்:
(துலாம் லக்னம், தனுசு ராசி. 7-ல் சூரி, புத. 9-ல் சுக். 11-ல் செவ், குரு, சனி, ராகு. 5.5.1980, மாலை 6.50, சென்னை)
துலாம் லக்னத்தில் பிறந்த உங்களுக்கு காய்கறிகளைக் குறிக்கும் சந்திரன்தான் ஜீவனாதிபதி என்பதால் காய்கனி அங்காடி மிகவும் பொருத்தமான தொழில்தான். தற்போது ராகுதசையில் யோகாதிபதி சனிபுக்தி நடந்து கொண்டிருப்பதால் தொழில் தொடங்குவதும் சரிதான்.
ஆனால் உங்களின் தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதால் அகலக்கால் வைக்காமல் முதல் மூன்று வருடங்களுக்கு கண்ணும் கருத்துமாக, அடுத்தவரை நம்பாமல் நீங்களே கடையில் இருந்து தொழிலை விருத்தி செய்ய வேண்டும். சூரியன் உச்சம் என்பதால் பொதுவாழ்விலும், சேவையிலும் ஈடுபாடு வரும். இன்னும் ஐந்து வருடங்களுக்கு பொதுசேவை எண்ணம் வேண்டாம். சனி முடிந்ததும் சோதனைகள் விலகும். எதிர்காலம் மதிப்பு, மரியாதையோடு இருக்கும்.
ஏ. ஆனந்தராஜ், சிவகாசி.
கே | சனி | ||
குரு | ராசி | சந் | |
ல | ரா | பு | சூ,சுக் செவ் |
கேள்வி :
பங்குச்சந்தை தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லையால் ஊரை விட்டு வெளியேறி குடும்பத்துடன் வசிக்கிறேன். கோவில்களில் அன்னதானத்திற்கு பண உதவி செய்தவன் இப்போது சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறேன். வேலை இல்லை. தகுதிக்கு மீறியகடன். கொடுக்க வேண்டியது லட்சங்களிலும், வருமானம்ஆயிரங்களிலும் இருக்கிறது. செய்த பரிகாரங்கள் பலன் தரவில்லை. பிள்ளைகளுக்காக இன்னமும் தற்கொலை செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறேன். பிள்ளைகளின் நல்வாழ்விற்கும் மனைவியுடன் பிரிவு ஏற்படாமல் இருப்பதற்கும், நிலையான வருமானம் வந்து கடன் தீர்வதற்கும், எனது குருவான தங்களிடமிருந்து தன்னம்பிக்கை ஊட்டும்அறிவுரைகளை வேண்டுகிறேன்.
பதில்:
(தனுசு லக்னம், கடக ராசி. 3-ல் குரு. 6-ல் கேது. 7-ல் சனி. 10-ல் சூரி, சுக், செவ். 11-ல் புதன். 10.10.1974, காலை 11.55, சிவகாசி)
2005 ஆண்டு முதல் தனுசு லக்னத்திற்கு வரக்கூடாத 6-க்குடைய கடன் ஸ்தானாதிபதியான சுக்கிரனின் தசை நடக்கிறது. சுக்கிரன் 8-க்குடைய ஆட்சி பெற்ற சந்திரனின் நட்சத்திரத்தில் அமர்ந்து நீசமாக இருக்கிறார். நீசம் பெற்ற சுக்கிரன் பரிவர்த்தனையின் மூலம் பலம் பெற்றது தவறு. இதனால் உங்களுக்கு கடனை மட்டுமே தரக்கூடிய ஒரு நிலையை பெற்றுவிட்டார். பாபவலுப் பெற்ற 6-க்குடையவன் தசையில் யூகவணிகம் எனப்படும் ரிஸ்க்கான தொழில்களில் ஈடுபடக் கூடாது. நஷ்டம் வரும்.
அடுத்து மனைவிக்கு ரிஷபராசியாகி அஷ்டமச்சனி நடக்க உள்ளதால் உங்களுடைய கடன்கள் முழுவதுமாக அடைப்படுவதற்கு இன்னும் மூன்று வருடங்களாகும். அதேநேரத்தில் சுக்கிரனுக்கு அடுத்த தசாநாதன் சூரியன் 10-ல் திக்பலமாக உள்ளதால் சூரியதசை ஆரம்பித்ததும் நிச்சயமாக பழைய செல்வாக்குடன் இருப்பீர்கள். மனைவிக்கு அஷ்டமச்சனி நடக்க உள்ளதால் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எதையும் பொறுத்துப் போங்கள்.
ஜாதகப்படி 46 வயதிற்கு மேல் நல்ல அமைப்புகள் உருவாவதால் ஒருநாளும் கெட்டுப் போய் விடமாட்டீர்கள். இப்போது இருக்கும் சோதனைகள் தற்காலிகமானதுதான். குழந்தைகளின் ஜாதகம் லக்னாதிபதி வலுப்பெற்று யோகத்துடன் அமைந்திருப்பதால் அவர்களின் தந்தையாகிய நீங்கள் நன்றாக வாழ்ந்தே தீர வேண்டும். மூன்று வருடங்கள் பொறுங்கள். அனைத்தும் சீராகும்.
எஸ். சவுந்தரராஜன், அப்பாக்கவுண்டன், புதூர்.
ராசி | சுக்,ல ரா | ||
சந் கே | குரு | ||
செவ் | சனி |
கேள்வி :
2010- ல் திருமணம் நடந்து இரண்டே மாதத்தில் விவாகரத்தும் நடந்துவிட்டது. இன்றுவரை மறுமணத்திற்கு பெண் பார்த்துகொண்டிருக்கிறோம். பெண் பார்க்கப் போகும் இடத்தில் ஒரு வாரம் கழித்து பதில் சொல்கிறோம் என்று சொல்கிறார்கள். அந்த ஒரேவாரத்தில் அந்த பெண்ணிற்கு திருமணம் நடந்து விடுகிறது. இதுபோல 20 பெண்ணாவது பார்த்திருப்பேன். எனது திருமணம் நடக்குமா? இப்படியேஇருந்து விடுவேனா?
பதில்:
(கடக லக்னம், மகர ராசி. 1-ல் சுக், ராகு. 2-ல் குரு 3-ல் சூரி, புத, சனி. 21.9.1980, அதிகாலை 2.12, திண்டுக்கல்)
ஒருவருடைய ஜாதகப்படி ஏழாமிடம் முதல் திருமணத்தையும் பதினொன்றாமிடம் இரண்டாவது திருமணத்தையும் குறிக்கும். உங்கள் ஜாதகத்தில் ஏழுக்குடைய சனி, சூரியனுடன் இரண்டு டிகிரிக்குள் இணைந்து அஸ்தமனமாகி, ஏழாமிடத்தோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு, தாம்பத்திய சுகத்தை கொடுக்கக் கூடிய சுக்கிரனும், ராகுவுடன் நான்கு டிகிரிக்குள் கிரகணமானதால் கடுமையான தார தோஷம் ஏற்பட்டுள்ளது.
கடகலக்னத்திற்கு குருபகவான் ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்டால் தன்னுடைய தசையில் முதல் பாதி எட்டு வருடங்கள் கடுமையான சாதகமற்ற பலன்களைத் தருவார். தற்போது உங்களுக்கு குரு தசையில் முதல் பாதி நடந்து கொண்டிருக்கிறது. எனவே திருமணம் இன்னும் தாமதமாகும். ஏழாமிடத்தில் சுக்கிரனுடைய பார்வையை வாங்கி லக்னாதிபதி சந்திரனுடன் இணைந்திருக்கும் கேதுவின் புக்தியில் 2019 வருடம் பிற்பகுதியில் உங்களுக்கு திருமணம் நடக்கும்.
பி. சந்திரசேகரன், கொடுங்கையூர்.
சூ சுக் | ரா | சந் | |
குரு பு | ராசி | ||
ல | |||
செவ் | சனி | கே |
கேள்வி :
மகளுக்கு திருமணம் நடைபெறாமல் நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நன்றாகப் படித்து எம்.சி.ஏ முடித்து தனியார் நிறுவனத்தில் 22 ஆயிரம் சம்பாதித்து வந்த எனது மகள் கடந்த மே மாதம் முதல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாள். என்னிடம் பேசுவதும் இல்லை. வாழ்வா, சாவா என்ற மனக்குழப்பத்தில் உள்ளேன். மகளுக்கு எப்போது திருமணம்?
பதில்:
(சிம்ம லக்னம், மிதுனராசி. 3-ல் கேது. 4-ல் சனி. 5-ல் செவ். 7-ல் குரு, புத. 8-ல் சூரி, சுக். 19.3.1986, மாலை 4.15, கடலூர்)
மகளின் ஜாதகத்தில் ராசிக்கு ஏழில் செவ்வாய் இருப்பது தாமத திருமண அமைப்பு என்பதை விட உங்களுக்கு விருச்சிக ராசியாகி ஜென்மச்சனி நடந்து கொண்டிருப்பதுதான் அவளது திருமணத்திற்கான தடை. திருமணம் என்பது மகளைப் பொறுத்தவரை ஒரு வாழ்வு நிகழ்ச்சி. ஆனால் உங்களுக்கோ மகளின் திருமணம் என்பது பரிபூரண ஆனந்தத்தை கொடுக்கக் கூடியது. விருச்சிகத்திற்கு சந்தோஷம் தரும் குடும்ப சுபகாரியங்கள் இந்த வருட இறுதியில்தான் நடக்கும். கவலைப்பட வேண்டாம். வரும் தீபாவளிக்குப் பிறகு எந்த நேரத்திலும் மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்துவீர்கள்.
வி. சதீஷ், அயனாவரம்.
சந் ரா,செ | ல | ||
குரு பு | ராசி | ||
சூ | |||
சுக் | சனி | கே |
கேள்வி :
எந்த தொழிலிலும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. எல்லா விதமான தொழிலும் காண்ட்ராக்டில்தான் கிடைக்கிறது. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு எப்போது நிரந்தமான வேலை கிடைக்கும்? எப்போது திருமணம்?
பதில்:
(மிதுன லக்னம், மீன ராசி. 6-ல் சனி. 7-ல் சுக். 9-ல் குரு, புத. 10-ல் செவ், ராகு. 2.2.1987, பகல் 3.34, சென்னை)
தற்போது உங்களுக்கு ஐந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் கேதுதசை யோகம் செய்யாது. கேதுவும் பத்தாமிடத்தில் இருக்கும் செவ்வாயும் நேருக்கு நேர் இரண்டு டிகிரிக்குள் இருப்பது மிதுனலக்னத்திற்கு தொழில்ரீதியில் நன்மைகளைச் செய்யாது.
அடுத்து நடக்க இருக்கும் சுக்கிரதசை உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தரும். நவாம்சத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது யோகம். எனவே சுக்கிரதசை ஆரம்பித்ததும் நிரந்தர தொழில் அமையும். சுக்கிரன் ஏழாமிடத்தில் தனித்து அமர்ந்திருப்பது களத்திர தோஷம் என்பதால் தாமத திருமணம்தான். முப்பத்தி மூன்று வயதில் நடக்கும்.
பிரபாகரன், ஊர் பெயர் இல்லை.
ல | சூ,பு | ||
ராசி | சுக் கே | ||
ரா | செவ் சனி | ||
குரு | சனி சந் |
கேள்வி :
நான்காம் வகுப்பு படிக்கும் எனது மகன் இதுவரை எந்த வகுப்பிலும் பாசாகவில்லை. வரும் காலங்களில் நன்றாக படிப்பானா? அவனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
(மீன லக்னம், துலாம் ராசி. 4-ல் சூரி, புத. 5-ல் சுக், கேது. 6-ல் செவ், சனி. 10-ல் குரு. 12-7-2008, அதிகாலை 0.16 மணி, மதுரை)
ஒரு குழந்தை ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் படிப்பில் கவனமின்றி சோம்பலாக இருப்பது இயல்புதான். அதைவிட முக்கியமாக பரீட்சை எழுதும்போது படித்தது மறந்து போகும். இந்த வருடத்துடன் துலாம் ராசிக்கு சனி முடிவதால் அடுத்த வருடத்தில் இருந்து மகனின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும்.
லக்னாதிபதி குருபகவான் பத்தில் ஆட்சியாக இருப்பது மகனின் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. புதனும் ஆட்சியாக இருப்பதால் கல்வியறிவும் வளமாக இருக்கும். எதிர்காலத்தில் வங்கி, வருமானவரி அல்லது சொல்லிக் கொடுக்கும் துறை போன்றவற்றில் அரசுப் பணியில் இருப்பான்.
புத்திர தோஷ பரிகாரங்கள் என்ன?
ஆர். ராஜேஸ்வரி, யாழ்ப்பாணம், இலங்கை.
சந் ரா | |||
ராசி | |||
ல செவ் | |||
குரு சுக் | பு கே | சூ சனி |
ல | செவ் | குரு கே | |
ராசி | |||
சுக்.ரா சனி | |||
சூ பு | சந் |
கேள்வி :
லண்டனில் வேலை பார்க்கும் எனது மகனுக்கு இற்றை வரை குழந்தைப்பேறு இல்லை. அண்மையில் ஒரு ஜோதிடர் இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறினார். மகன்-மருமகள் ஜாதகங்களை குறிப்பிட்டுள்ளேன். இவர்களது குழந்தை பாக்கியம் பற்றி அறியத்தருவீர்களா? லண்டனில் பட்டப்படிப்பு முடித்த இவரது தொழில் மேன்மை, எதிர்காலம் பற்றியும், செய்ய வேண்டிய பரிகாரங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
பதில்:
(கணவன்: மகர லக்னம், ரிஷப ராசி. 1-ல் செவ். 5-ல் ராகு. 10-ல் சூரி, சனி. 11-ல் புத, கேது. 12-ல் குரு, சுக். 10.11.1984, 11.15 காலை, யாழ்ப்பாணம். மனைவி: மேஷ லக்னம், துலாம் ராசி. 2-ல் செவ். 3-ல் குரு, கேது. 9-ல் சூரி, புத. 10-ல் சுக், ராகு, சனி. 10.1.1991, மதியம் 1.10, யாழ்ப்பாணம்)
மகன் ஜாதகத்தில் ஐந்தில் ராகு அமர்ந்து, ஐந்துக்குடைய சுக்கிரனும், புத்திரக்காரகன் குருவும் பனிரெண்டில் மறைந்த நிலையில் இவர்கள் இருவரையும் உச்சசனி பார்ப்பது புத்திரதோஷம். அதேபோல மருமகளுக்கு புத்திரக்காரகன் குரு, ராகு-கேதுக்களுடன் இணைந்து சனி பார்வை பெற்றதும் குற்றம். முறையான பரிகாரங்களுக்கு பிறகு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு. மகனுக்கு 2020-ல் ஆரம்பிக்க இருக்கும் குருதசையில் பெண் குழந்தை பிறக்கும். அதற்கு முன் பிறக்க பரிகாரங்கள் தேவைப்படும். முக்கியமாக புத்திர பாக்கியத்தை தடுக்கின்ற ராகுவிற்கான பரிகாரங்களை செய்ய வேண்டும்.
லண்டன் போன்ற வெளிநாடுகளில் பரிகாரத் தலங்கள் கிடையாது. அங்கிருப்பவை வழிபாட்டுக் கோவில்கள்தான். எனவே தாய்நாட்டிற்கு வந்து திருத்தலங்களில் வழிபட முடியாத நிலையில் நமது ஞானிகள் அறிவுறுத்திய பாக்கியத்தைக் தடுக்கும் கிரகத்திற்குரிய தானம், வாகனம், தான்யம், உலோகம், கல் போன்றவைகளை வைத்து பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. ராகு, குருவிற்கான முறையான பரிகாரங்களை மாலைமலரில் விரிவாக எழுதியிருக்கிறேன். அவற்றைச் செய்யுங்கள்.
மகனின் ஜாதகத்தில் உச்ச சந்திரனுக்கு 6,7,8-ல் கிரகங்கள் இருப்பது சிறப்பான ஒரு யோகம் அந்த சந்திரன் பவுர்ணமிக்கு அருகில் இருப்பதும் நல்ல அமைப்பு. அடுத்து நடக்க இருக்கும் குருதசையில் பிள்ளை பிறந்தது முதல் வாழ்க்கை வளமாக இருக்கும். ரிஷபராசிக்கு வர இருக்கும் அஷ்டமச்சனி முடிந்த பிறகு வாழ்நாள் முழுவதும் நல்ல வாழ்க்கை வாழ்வார்.
ஸ்வாமிஜி
பரிகாரங்கள் ஜோதிட சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறதா. கிரஹத்தின் வலிமையை பரிகாரங்களால் மாற்றமுடியுமா? பல ஜோதிடர்கள் ஏன் பரிகாரங்களை சொல்லுகின்றனர். கிரஹங்களால் வரும் தொல்லைகள் பரிகாரம் செய்துவிட்டால் நீங்கிவிடும் என்றால் கிரஹங்களுக்கு சக்தி கிடையாது என்று அர்த்தம் ஆகிவிடுகிறதே விளக்க வேண்டுகிறேன்