adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 31 (31.3.15)
எஸ். கண்ணன், திருச்சி - 18.
கேள்வி :
மூன்று முறை அனுப்பியும் நீங்கள் பதில் அளிக்கவில்லை. தயவு செய்து பதில் தரவும். நினைவு தெரிந்த நாள் முதல் திக்குவாய் இருக்கிறது. இதனால் வேதனை, அவமானங்கள். இதற்கு நிவர்த்தி உண்டா? ஆயுள் எவ்வளவு? நோயினால் மூன்று முறை ஆபரேஷன் செய்திருக்கிறேன். இனிமேலாவது ஆரோக்கியமாக இருப்பேனா? குடும்பத்தில் சண்டை இல்லாத நாளே இல்லை. நிம்மதி சந்தோஷம் இனிமேலாவது இருக்குமா? குருஜி அவர்களே தங்களால் மட்டும்தான் எனக்கு பதில் தரமுடியும்...
பதில்:
10.9.1951-ல் பிறந்த உங்களது ஜாதகம் தவறாக கணிக்கப்பட்டுள்ளது. பிறந்த நேரத்தையும் நீங்கள் அனுப்பவில்லை. அதனால்தான் மூன்று முறை உங்கள் கடிதத்தை நிராகரித்தேன். நீங்கள் அனுப்பிய ஜாதகப்படி கும்ப லக்னமானால் இரண்டிற்குடைய குருபகவான் இரண்டில் ஆட்சிபெற்று ஆறுக்குடைய சந்திரன் ஆறுக்கு ஆறான பதினொன்றில் அமர்ந்துதிக்கு வாயும் நோயும் உங்களுக்கு இருக்கக் கூடாது.
எந்த ஒரு ஜோதிடர் பிறந்த நேரத்தைக் குறிக்காமல் பிறந்த நாழிகை கணக்கை மட்டும் ஜாதகத்தில் குறிக்கிறாரோ அவர் அங்கே ஏதோ தவறு செய்திருக்கிறார் என்பதோடு அடுத்த ஜோதிடர் அதைக் கண்டுபிடிக்கக்கூடாது என்று மறைக்கிறார் என்று அர்த்தம்.
கும்ப லக்னம் என்றால் வாக்கு ஸ்தானாதிபதி சுபராகி அந்த பாவத்தில் ஆட்சிபெற்று அம்சத்திலும் ஆட்சிபெற்ற நிலையில் நீங்கள் எப்படி திக்குவாயாக இருக்க முடியும்?
மகர லக்னம் என்றால் இரண்டில் ராகு அமர்ந்து இரண்டாமிடத்தை நீச செவ்வாயும் எட்டுக்குடைய சூரியனும், ஆறுக்குடைய புதனும் பார்த்து வாக்கு ஸ்தானம் கெட்டதால் உங்களுக்கு திக்குவாய். என்பது சரியாக வரும். இது 63 வயதிற்கு மேல் நிவர்த்தியாக வாய்ப்பு இல்லை. குடும்ப ஸ்தானமே கெட்டுப் போனதால் குடும்பத்தில் நிம்மதி இல்லை. அஷ்டமாதிபதி சூரியன் ஆட்சி பெற்றதாலும் லக்னாதிபதியை குரு பார்த்ததாலும் ஆயுள் எண்பதுக்கு மேல். தற்போது நடக்கும் குரு தசையில் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்க இருக்கும். சுக்கிர புக்தி முதல் நிம்மதி கிடைக்கும்.
சி. கௌதமராஜ், திருச்செங்கோடு.
கேள்வி :
ல சூ குரு சுக் பு  செவ்
ரா ராசி  சந்
 கே
சனி
நிறைய ஜோதிடர்களைப் பார்த்துவிட்டேன் எதுவும் அமையவில்லைநீங்கள்தான் என் கடைசி நம்பிக்கைஎன்னிடம் திறமை இருக்கிறதுஅதிர்ஷ்டம் இல்லை என்பது என் எண்ணம். கல்லூரி முடித்து இன்றுவரை நிரந்தரமாக ஒரு வேலை இல்லை. சினிமாவில் டைரக்டராக வெற்றி பெறுவேனா? அரசியல் ஒத்துவருமா? சொந்தத் தொழில் பண்ணலாமா?அல்லது வேலையா? அரசு வேலையா, தனியாரா? வெளிநாடு செல்வேனா? குழம்பிப் போய் பெற்றோர், நண்பரிடத்தில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
பதில்:
மேஷ லக்னம், கடக ராசி, லக்னத்தில் சூரி, இரண்டில் புத, சுக், குரு. மூன்றில் செவ்வாய், ஐந்தில் கேது, ஒன்பதில் சனி.
லக்னாதிபதி சனி பார்வை பெற்று ஐந்து, ஒன்பதாம் இடங்களில் பாபக்கிரகங்கள் அமர்ந்து லக்னமோ, ராசியோ சுபர்பார்வை பெறாமல் மேஷ லக்னத்திற்கு வரக்கூடாத புதனின் தசை நடந்து கொண்டிருப்பதால் எதிலும் வெற்றி கிடைக்காது, ஒரு நிலையான புத்தியும் இருக்காது.
லக்னாதிபதி வலுவாக இருந்தால் மட்டுமே ஒரே லட்சியமும் அதை நோக்கிச் செல்லும் குறிக்கோளும் இருக்கும். அவர் வலுவாக இல்லை என்றால் இப்படித்தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் அங்கங்கே வாய் வைத்து அனைத்தையும் வெற்றிகரமாக சொதப்புவீர்கள்.
29வயது முடியும் வரை புதன் தசை நடப்பதால் அதுவரை அம்பானியே உங்களை பார்ட்னராக சேர்த்துக்கொண்டாலும், அந்நியன் விக்ரமே கூப்பிட்டு கால்ஷீட் தந்து படத்தை இயக்கச் சொன்னாலும் இதுபோலத்தான் குழம்புவீர்கள். கேதுதசை முதல் நல்லமாற்றம் உண்டு. லக்னாதிபதி செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள்.
விரும்பிய பெண் கிடைப்பாளா?
மூ. சதீஷ்குமார், கிதாம்பரம்.
கேள்வி :
செவ்
ராசி  குரு கே
ல,சுக் சனி,ரா
 பு சூ  சந்
ஏழு வருடமாக ஒரு பெண்ணை காதலித்துவந்தேன். திருமணம் செய்வதாக சொல்லி இரண்டு முறை ஏமாற்றிவிட்டாள். ஒன்றரை வருடமாக எந்த வேலையும் அமையவில்லை. எந்த வேலைக்குப் போனாலும் ஒரு மாதத்திற்கு மேல் வேலை செய்ய முடியவில்லைஊரைச் சுற்றிக் கடன். விரும்பிய பெண் மறுபடியும் கிடைப்பாளாஅவளைத் திருமணம் செய்வேனாநல்லவேலை எப்போது கிடைக்கும்?
பதில்:
மகர லக்னம், துலாம் ராசி. லக்னத்தில் சுக், சனி, ராகு. ஐந்தில் செவ். ஏழில் குரு. பனிரெண்டில் சூரி, புத. (9.1.91, 7.30 காலை, சென்னை).
லக்னத்தில் ராகுவுடன் சுக்கிரன் சனி அமர்ந்து சந்திரனும் ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்து பிஞ்சில் பழுத்த ஜாதகம்.
பதினைந்து வயது முதல் மூன்றுக்குடைய போகஸ்தானாதிபதி உச்சவக்ரம் பெற்று சுக்கிரனின் பார்வையைப் பெற்றதால் போகத்தையும், பெண்ணையும் தவிர வேறு எந்த நினைவும் இல்லை. இப்போது கூட அந்தப் பெண் எனக்குக் கிடைப்பாளா என்று கேட்டு அடுத்த கேள்வியாகத்தானே வேலை கிடைக்குமா என்று கேட்கிறாய்? பெண்ணின் பின்னால் சுற்றுவதை விட்டுவிட்டு ஒரு வேலையின் பின்னால் சுற்றியிருந்தால் இந்நேரம் ஆயிரம் பெண்கள் உன் பின்னால் சுற்றியிருப்பார்கள்.
லக்னாதிபதி சனி இரண்டு டிகிரிக்குள் ராகுவிடம் சரணடைந்து ஏழரைச்சனியும் நடப்பதால் இப்போதைக்கு உனக்கு நல்லபலன் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. நான் என்ன சொன்னாலும் நீ கேட்கவும் மாட்டாய். ஏழரைச்சனி முடிந்து 2019ல் ஆரம்பிக்கும் ராகுபுக்தியில் இருந்து உன்னுடைய மனம் மாறி வாழ்க்கையைப் புரிந்து கொண்டு தெளிவான பாதைக்கு வருவாய். அதன் பிறகே உனக்கு முன்னேற்றம்.
டி. வெங்கடேசன், திருவல்லிக்கேணி.
கேள்வி:
சந் சனி கே
ராசி
 சூ,ரா குரு பு சுக் செவ்
2002 - ல் திருமணம் நடந்து மனைவியுடன் மூன்று மாதம் மட்டுமே வாழ்ந்தேன். 2005 - ல் விவாகரத்து செய்துவிட்டாள் இரண்டாவது திருமணத்திற்கு முயற்சித்தும் இதுவரை அமையவில்லை. நடக்குமா? இரண்டாவது மனைவி கடைசி வரை சேர்ந்து வாழ்வாளா?
பதில்:
கும்ப லக்னம், மேஷ ராசி, நான்கில் சனி, ஒன்பதில் செவ், பத்தில் புத, சுக். பதினொன்றில் சூரி, குரு, ராகு, (16.12.1972, 11.55 காலை, சென்னை )
ராசிக்கு இரண்டில் சனி, ஏழில் செவ்வாய், சுக்கிரனுக்கு சனி பார்வை. முதல் தாரத்தைக் குறிக்கும் சூரியனும், இளைய தாரத்தை குறிக்கும் குருவும், ராகுவுடன் சேர்க்கை. அதோடு கும்பலக்னத்திற்கு சந்திர தசை எந்த நிலையிலும் நன்மைகளைச் செய்யாது. கும்பலக்னத்தில் பிறந்தவர் யோகசாலியாக இருந்தால் சந்திரதசை வராது.
உங்களுக்கு 2004 முதல் 2014 வரை பத்துவருடங்கள் நடந்த சந்திர தசையில் அனைத்துமே வீண்தான். தற்பொழுது நடக்கும் செவ்வாய் தசை குரு புக்தியில் 2016 ஆரம்பத்தில் இரண்டாவது திருமணம் நடைபெறும். ஆனால் கும்ப லக்னத்தை சனி பார்ப்பதால் ஏற்படும் சந்தேக புத்தியை மாற்றிக் கொண்டால் இரண்டாவது வாழ்க்கை சந்தோஷம்தான்.
ராமசாமி, கோவை – 33.
கேள்வி:
சூ,சனி சுக்,பு
ராசி  கே
செவ் ரா  ல
 சந் குரு
குருஜி அவர்களிடம் நான் தெரிந்து கொள்ள விரும்புவது என் மகனுக்கு திருமணமே இல்லையா? நடைபெறுமா? நடைபெறாதா? காளஹஸ்தி, திருமணஞ்சேரி, வைத்தீஸ்வரன் கோவில் என பல ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்கள் எல்லாம் செய்தாகிவிட்டது. உங்கள் வாக்கை எதிர்பார்க்கிறேன்.
பதில்:
சிம்ம லக்னம், தனுசு ராசி, நான்கில் குரு, ஆறில் செவ், ராகு. பத்தில், சூரி, புத, சனி, சுக், (10.6.1971, 11.40 பகல், கோவை)
குருவும் சுக்கிரனும் நேருக்குநேர் பார்த்து சுக்கிரன் தரும் தாம்பத்யசுகத்தை குரு தடுத்தும், குருவின் புத்திரசுகத்தை சுக்கிரனும் தடுத்த ஜாதகம். ராசிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம் கூடவே வலிமையான ராகு, ஏழாம் வீட்டிற்கு சனி பார்வை. ராகு தடுத்ததை ராகுதான் கொடுப்பார்.
வரும் நவம்பர் முதல் ராகுதசை ஆரம்பிக்க உள்ளதால் கார்த்திகை மாதம் மூலநட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் சூரிய அஸ்தமனம் முதல் முழுஇரவு தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டு. திருமணமானவுடன் முதல் வேலையாக தம்பதிசமேதராக வருவதாக உங்கள் மகனை வேண்டிக்கொள்ளச் சொல்லுங்கள். 2016 ஜூலை மாதத்திற்குள் நிச்சயம் திருமணம் நடக்கும்.
கா. பொன்னுசாமி, சுண்டைக்காம்பாளையம்.
கேள்வி:
சூ பு குரு சுக்
ரா ராசி
செவ் சந்  கே
 சனி
ஜோதிட ஆர்வத்தின் காரணமாக மாலைமலரையும், உங்களது வெப்சைட்டையும் வேதப் புத்தகம் போல் படித்து வருகிறேன். அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். பிறந்தது முதல் வறுமை. தற்பொழுதும் குடியிருக்க சரியான வீடு கிடையாது, திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? சொந்தவீடு அமையுமா? குரு எட்டில் மறைவது அதனுடைய நாலு, ஏழு, பாவ பலன்களை பாதிக்காதா? புதன் நீசபங்கமா? அம்சத்தில் குரு, சூரி, பரிவர்த்தனை. சூரியன், சுக்கிரன் வர்கோத்தமம் என்ன நன்மையை செய்யும் தங்களது பதிலையும், ஆசிர்வாதத்தையும் எதிர்பார்க்கிறேன்.
பதில்:
கன்னி லக்னம், மகர ராசி, நான்கில் சனி, ஐந்தில் செவ், ஆறில் ராகு, ஏழில் சூரி, புத, எட்டில் குரு, ஒன்பதில் சுக். (11.4.1988, 5.30, மாலை, ஈரோடு)
ஜூன் மாதம் முதல் வீடு, வாகனத்திற்குரிய நான்காம் பாவத்தின் அதிபதியாகி அந்த பாவத்தைப் பார்க்கும் குருவின்தசை ஆரம்பமாவதால் சொந்தவீடு குருதசையில் அமையும். சுயபுக்தியிலேயே திருமணம் நடக்கும் உபய லக்னங்களுக்கு குருபகவான் மறைந்து நட்பு பெறுவதுதான் யோகம்.கன்னி லக்னத்திற்கு குரு கேந்திராதிபதியும் பாதகாதிபதியும் ஆவார் என்பதால் குரு மறைவது நல்லதே.

லக்னகேந்திரத்தில் நீச கிரகம் இருந்தாலே ஓரளவு நீசபங்கம்தான் என்பதால் கன்னி, மிதுன லக்னக்காரர்களுக்கு எப்பொழுதுமே புதன் நீசபங்கம்தான். ஆனால் அவர் சுக்கிரனுடன் சேர்ந்தால்தான் ராஜயோகத்தை செய்வார். நவாம்சத்தில் பார்வை பலனோ, பரிவர்த்தனையோ கிடையாது. அம்சத்தில் சூரியன், சுக்கிரனும் வர்கோத்தமம் அடைந்ததால்தான் வாக்கு ஸ்தானாதிபதியும் அரசுக்கிரகமும் வலுவடைந்து அரசு ஆசிரியராக இருக்கிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *