பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி, சென்னை – 126.
கேள்வி:
ல சூ | குரு சுக் | சந் ரா | செவ் |
பு | ராசி | ||
சனி | கே |
குருஜி அவர்களே மீண்டும் இதை நிராகரிக்க வேண்டாம். 85 வயதாகிறது. ஆபரேஷன் செய்தும் வலது கண் தெரியவில்லை. மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கிறேன். பணம், நிம்மதி எப்பொழுது வரும்? வியாதிகள் தொந்தரவு எப்பொழுது நீங்கும்? இன்னும் எத்தனை வருஷம் நாட்கள் உயிருடன் இருப்பேன்?
பதில்:
ஆயுள் பற்றிய கேள்விகளுக்கு பதில் தரமாட்டேன் என்று சொன்னாலும் திரும்பத் திரும்ப இது போன்ற கேள்விகளை அனுப்பினால் நான் என்ன செய்வது என்று உங்களைப் போன்ற பெரியவர்கள்தான் சொல்ல வேண்டும்.
மீன லக்னம், ரிஷப ராசியாகி எட்டுக்குடைய சுக்கிரன் இரண்டில் குருவுடன் இணைந்து எட்டாமிடத்தை பார்த்து, ராசிக்கு எட்டுக்குடைய குரு லக்னத்திற்கு எட்டையும், ராசிக்கு எட்டையும் பத்தாமிடத்தில் இருக்கும் ஆயுள்காரகன் சனியையும் பார்த்த தீர்க்காயுள் ஜாதகம்.
எத்தனை வருஷம் உயிருடன் இருப்பேன் என்பதனை அடித்து எத்தனை நாட்கள் என்று திருத்தியுள்ளதில் இருந்தே உங்களின் நிலைமை புரிகிறது. இருந்தாலும் பரம்பொருளின் கணக்குகள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு புரிவதில்லையே!
தற்பொழுது நடக்கும் புதன் தசையில் லக்னாதிபதி குருவின் புக்தியில் நீங்கள் இந்த உலகை விட்டுச் செல்ல முடியாது. நடைபெறும் பாதகாதிபதி புதன் தசையில் அடுத்து வரும் விரயாதிபதி சனி புக்தியில் பனிரெண்டில் இருக்கும் புதன் அந்தரத்தில் 2017 பிற்பகுதியில் உங்களின் நல்முடிவு இருக்கும். மற்ற கேள்விகளுக்கான பதில் உங்களின் உள்ளுணர்வுக்கே தெரியும்.
எஸ்.தேவதாஸ், பாண்டிச்சேரி.
கேள்வி:
சந் | ல | ||
ராசி | செவ் ரா | ||
கே | |||
சுக் | சூ,பு குரு சனி |
எனது மூத்த மகனுக்கு எத்தனையோ பெண்கள் பார்த்துவிட்டோம். சில ஜோதிடர்கள் செவ்வாய் தோஷம் உள்ளதாக சொல்கிறார்கள். உண்மையா? எப்போது திருமணம் முடியும்?
பதில்:
மிதுன லக்னம் ரிஷப ராசி. இரண்டில் செவ்வாய், ராகு. நான்கில் சூரியன், புதன், குரு, சனி. ஐந்தில் சுக்கிரன்.
செவ்வாய் இரண்டில் இருந்தாலும் நீசமாக இருக்கிறார் என்பதால் தோஷம் இல்லை. ஆனால் அவருடன் ராகு வலுவாக இருப்பது கடுமையான தோஷம். தற்போது உங்கள் மகனுக்கு ராகு தசையும் அதில் சுக்கிர புக்தியும் நடக்கிறது. பொதுவாக மிதுன லக்னத்திற்கு சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். ஆனால் உங்கள் மகனுக்கு இதுவரை நடக்கவில்லை. மூன்று வருடங்களாக நடந்து வரும் சுக்கிர புக்தி இன்னும் ஆறு மாதங்களில் முடியப்போகிறது.
தாம்பத்திய சுகத்தைத் தருபவரான சுக்கிரன் இந்த ஜாதகத்தில் கெட்டுப் போகாமல் ஐந்தில் பலம் பெற்று இருப்பதாக தோன்றினாலும். அவர் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். அதோடு லக்னமும் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. ஒட்டு மொத்த அமைப்புகளும் ராகுவின் பிடிக்குள் இருந்து ராகு தசையும் நடப்பதால் ராகுவிற்கு பரிகாரங்கள் செய்த உடனே திருமணம் முடிந்து வாழ்க்கையில் செட்டில் ஆவார்.
எல்லாம் வல்ல இறைவன் காளத்திநாதன் ஒருவன் மட்டுமே இந்தத் தடையை நீக்க முடியும். உங்களுடைய பெயரை வைத்து கிறிஸ்துவர் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் மகனை அவரது ஜென்ம நட்சத்திரத்தன்று முதல் நாள் இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யுங்கள். உடனடியாக திருமணம் நடக்கும். இயலாவிடில் ராஜகோபுரம் தாண்டி கோவிலின் உள்ளே உங்கள் மகனை ஒரு ஜாம நேரம் (ஒன்றரை மணி நேரம்) இருக்கச் செய்யுங்கள். அற்புதம் நடக்கும்.
டி. ராஜாராம், அகமதாபாத்.
கேள்வி:
சூ,பு,ல குரு ரா | செவ் | ||
சுக் | ராசி | ||
சந் | |||
சனி | கே |
திருமணம் எப்பொழுது? நல்லவேலை கிடைக்குமா? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?
பதில்:
வரும் ஜூலை மாதத்திற்குள் திருமணம் நடக்கும். அதன்பிறகே கம்யூட்டர் சம்மந்தமான நிரந்தர வேலை அமையும். வெளிநாட்டு யோகம் இல்லை.
என். பழனிச்சாமி, பவானி.
கேள்வி:
செவ் பு,சனி | |||
சூ குரு கே | ராசி | ||
சுக் | சந் ரா | ||
ல |
பத்தாம் வகுப்பில் 484 மார்க் எடுத்து தற்பொழுது +2 படிக்கும் என் மகன் மருத்துவராக ஆசைப்படுகிறான். அவன் ஆசை நிறைவேறுமா?
பதில்:
விருச்சிக லக்னம், சிம்ம ராசியாகி நான்கில் சூரியன், குரு, கேது அமர்ந்து பத்தாம் வீட்டை பார்த்து தர்மகர்மாதிபதி யோகமும், பௌர்ணமி யோகமும் உண்டாகி தற்பொழுது பாக்கியாதிபதி சந்திரனின் தசையும், அடுத்து 2020க்கு மேல் செவ்வாய்தசையும் ஆரம்பிக்க உள்ளதால் உங்கள் மகன் மருத்துவத்துறையில் இருப்பார்.
சி. செல்வகுமார், கோவை.
கேள்வி:
சந் குருசனி | சூ | ||
ராசி | பு ரா | ||
கே ல | சுக் | ||
செவ் |
சந்,பு சுக்,ல | சூ | கே | |
சனி | ராசி | செவ் | |
ரா | குரு |
என் அப்பாவிற்கு ஜாதகம் இல்லை. கட்டிட வேலை செய்கிறார். நான்கு வருடங்களாக கடும்வேதனை. பெரிய நஷ்டம். லட்சக் கணக்கில் மருத்துவச் செலவு. எனது தந்தைக்கு கட்டிடத்தொழில் சரியா? வேறு தொழில் அமையுமா? படிப்பில் ஆர்வம் இருந்தாலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. என் அக்காவிற்கு எப்பொழுது திருமணம்?
பதில்:
உன்னுடைய ஜாதகத்தில் உன்னைப் பற்றி துல்லியமாகவும், உன் அப்பாவை பற்றி ஓரளவுக்கும்தான் சொல்ல முடியும். கடந்த மூன்று வருடங்களாக குடும்பத்தில் மூத்த பெண்ணான உன் அக்காவின் மீன ராசிக்கு அஷ்டமச்சனி நடந்துள்ளது. தற்பொழுது உனது மேஷ ராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பித்துள்ளது. குழந்தைகளின் ஏழரை மற்றும் அஷ்டமச்சனி தகப்பனை பாதிக்கும்.
என்னுடைய கணிப்புப்படி உன்னுடைய தம்பி அல்லது உன் தாய், தந்தை யாருக்கேனும் ஏழரைச்சனியும் நடந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு சனி நடக்கும் பொழுது எப்பேற்பட்ட யோக ஜாதகமும் வேலை செய்யாது.
சனிக்கு பரிகாரமாக பக்கத்தில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை தீபம் ஏற்றவும். படிப்படியாக கஷ்டம் நீங்கி உன் குடும்பம் சுபிட்சம் பெறும். நீயும் சிறப்பாக படிப்பாய். உன் அக்காவிற்கு இருபத்து ஐந்து வயதில் திருமணமாகும்.
எஸ். கிருஷ்ணவேணி, கோவை.
கேள்வி:
ல சூ,சுக் | பு | ||
ராசி | சந்,கே செவ் | ||
ரா | சனி | ||
குரு |
கான்வென்டில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் ஆறுவயது மகளுக்கு சரியாக படிப்பு வரவில்லை. குறும்பும் அதிகமாக செய்கிறாள். என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை...
பதில்:
மேஷ லக்னம் கடக ராசி லக்னத்தில் சூரி, சுக். இரண்டில் புதன். நான்கில் செவ், கேது. ஐந்தில் சனி. ஒன்பதில் குரு.
மேஷ லக்னத்தில் பிறப்பவர்கள் ஒருநிமிடம் கூட சும்மா இராமல் துறுதுறுவென இருப்பார்கள். என்னுடைய சூட்சுமவலுத் தியரிப்படி லக்னாதிபதி செவ்வாய் நீசம் அடைந்து சந்திரனுடனும், கேதுவுடனும் இணைந்து சூட்சுமவலு அடைந்த அருமையான யோகஜாதகம் உங்கள் குழந்தையுடையது.
லக்னத்தில் ஐந்திற்குடைய சூரியன் உச்சம் பெற்று அதனை ஒன்பதில் ஆட்சி பெற்ற குரு பார்ப்பது இன்னும் சிறப்பு. பின்னாளில் உங்களுக்கு பெருமை தேடித்தரப் போகிற பெண்ணைப் பெற்றுவிட்டு எதற்கம்மா கவலை? போகப்போக பெண் நன்கு படிப்பாள். அம்சத்தில் புதன் ஆட்சி பெற்று இருப்பது இதை உறுதி செய்கிறது.
வெ. விஜயபாலன், கோயம்புத்தூர்-26.
கேள்வி:
ரா | |||
குரு | ராசி | ||
ல செவ் | சூ | ||
சந் சனி | சுக் | பு கே |
பதில்:
திருக்கணிதப்படி மகர லக்னம் விருச்சிக ராசி. இரண்டில் குரு. மூன்றில் ராகு. எட்டில் சூரியன், புதன். பத்தில் சுக்கிரன். பதினொன்றில் சனி. பனிரெண்டில் செவ்வாய். கேதுதசையில் குருபுக்தி முடிந்து சனிபுக்தி நடப்பு.
மகனுக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதால் சனி முடிந்த பிறகு தொழில் முன்னேற்றம் அடைந்து வருமானம் நன்கு வரும். திருமணம் உங்கள் நண்பர் சொன்னபடி தாமதமாக சுக்கிரதசையில் நடக்கும். ஏழுக்குடையவன் நீசம் பெற்று, ராசியில் சனி இருந்து ராசிக்கு ஏழாம் வீட்டை பார்த்து, ராசிக்கு இரண்டில் சனியும் இருப்பது தாமத திருமண அமைப்பு.
வி. சண்முகம், காரைக்குடி.
கேள்வி:
குரு | |||
ராசி | கே | ||
சுக் ரா | |||
ல,பு சூ,சனி | சந் செவ் |
பொறியியல் பட்டதாரியான என் மகனுக்கு ஐந்து வருடமாக வேலை கிடைக்கவில்லை. வெளிநாடு செல்ல பலமுறை முயன்றும் முடியவில்லை. வெளிநாட்டு யோகம் உள்ளதா?
பதில்:
தனுசு லக்னம் விருச்சிக ராசி. லக்னத்தின் சூரியன், புதன், சனி. இரண்டில் சுக்கிரன், ராகு. ஏழில் குரு. பனிரெண்டில் சந்திரன், செவ்வாய்.
ஏழரைச்சனி நடப்பதால் எல்லாவற்றிலும் தடைகள் உண்டாகிறது. நடக்கும் புதன்தசையில் 2016 ஜனவரியில் ஆரம்பிக்க இருக்கும் சரராசியான மகரத்தில் இருக்கும் ராகு புக்தியில் உங்கள் மகன் வெளிநாடு செல்வார்.
Natesh. D.o.b:08/05/1989. Birth time :11:45pm. Birth place: Tiruchirappalli. Eppothu nalla thozhil amaiyum.thirumanam eppothu amaiyum
வணக்கம்
ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
வணக்கம்
தேவி
ADMIN