டி. நாகரத்தினம், மயிலாடுதுறை.
கேள்வி :
சூ | சனி பு | ல சந் | |
சுக் | ராசி | கே | |
ரா | |||
செவ் | குரு |
43 வயதாகும் என் சகோதரிக்கு திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது. நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று விடுகிறது. காரணம் என்ன? எப்போது திருமணம் நடக்கும்? தங்களின் பதிலையும், பரிகாரத்தையும் குடும்பத்துடன் எதிர்பார்க்கிறோம்.
பதில்:
ரிஷபலக்னம் ரிஷபராசி. மூன்றில் கேது. ஏழில் குரு. எட்டில் செவ்வாய். ஒன்பதில் ராகு. பத்தில் சுக்கிரன். பதினொன்றில் சூரியன். பனிரெண்டில் சனி, புதன்.
பத்தாமிடத்தில் லக்னாதிபதி சுக்கிரன் திக்பலம் இழந்து லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த சனி நீசமாகி சுக்கிரனின் ஜென்ம விரோதியான குருபகவான் உச்சசந்திரனின் பார்வையுடன் கெஜகேசரி யோகமும், ஏழுக்குடைய செவ்வாயுடன் பரிவர்த்தனையும் பெற்ற ஜாதகம். ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியை விட அவரது எதிரி வலுவாகக் கூடாது. ரிஷப லக்னத்திற்கு கெஜகேசரி யோகம் இருக்கக்கூடாது. ஏழாமிடத்தில் எட்டிற்குடையவன் அமர்ந்து எட்டில் செவ்வாயும், குடும்பாதிபதி புதன் பனிரெண்டில் மறைந்து தற்போதைய தசாநாதன் சனியும், நீசமானதால் இதுவரை திருமணம் அமையவில்லை.
ஜென்ம நட்சத்திரமன்று கஞ்சனூர் சென்று வழிபட்டு ஒன்றரைமணி நேரம் கோவிலுக்குள் தங்கையை இருக்க வைக்கவும். ஒரு கால் இழந்த முடவருக்கு சனிக்கிழமை இரவு 8முதல் 9மணிக்குள் சனிஹோரையில் ஒரு பொது இடத்தில் தங்கையின் கையால் ஊன்றுகோல் தானம் கொடுக்கவும். இருபது வாரம் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு சிறிது மொச்சையை தலைக்கடியில் வைத்துப் படுத்து கடைசிவாரம் மொத்தமாக சேர்த்து ஓடும் நீரில் கரைக்கவும். 2015இறுதியில் ஆரம்பிக்கும் சனிதசை, சுக்கிர புக்தியில் நிச்சயம் திருமணம் நடக்கும்.
டி. சுப்புராம், கோவை - 1.
கேள்வி:
செவ் | பு கே சனி | ||
ராசி | சூ | ||
குரு | சந் சுக் | ||
ரா | ல |
மனை வாங்க வேண்டும் என்று மாதாமாதம் பணம் கட்டி வந்தேன். திடீரென்று ஏமாற்றிவிட்டார்கள். கட்டிய பணத்தை திரும்பத் தந்து விடுகிறேன் என்று இரண்டு வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எப்பொழுது பணம் கிடைக்கும்? கடன் எப்பொழுது தீரும்? வாழ்க்கையில் எப்பொழுது வசந்தம் வரும்?
பதில்:
புதன் ஆட்சி பெற்று வர்க்கோத்தமமும் பெற்ற உங்களுக்கு உங்கள் ஜாதகத்தை பார்த்து கொள்ளும் அளவிற்காவது ஜோதிடஅறிவு இருக்குமே? பிறகு ஏன் நீசனின் வீட்டில் அமர்ந்த ராகுவின் தசையில் அடுத்தவரை நம்பி ஏமாறுகிறீர்கள்?
கட்டிய பணம் ராகுதசை புதன்புக்தியில் முழுவதுமாக திரும்ப கிடைக்கும். புதன் பாக்கியாதிபதியாகி சனியுடன் இணைந்திருப்பதால் புதன் புக்தியில் இருந்து ராகுதசை நன்மை செய்யும். சுக்கிரபுக்தியில் மனை வாங்கி வீடு கட்டும் யோகம் உண்டு.
வி. காயத்ரி, சென்னை.
கேள்வி:
கே | செவ் | ||
ராசி | சூ,பு சனி | ||
சந் ல | சுக் | ||
குரு ரா |
கணவரை இழந்து பெற்றோர் தயவில் இருக்கும் என் மகன்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? வாழ்க்கையில் முன்னுக்கு வருவார்களா? மகன்களை நினைத்தாலே பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது. பெரியவனுக்கு எட்டில் சுக்கிரன். நீங்கள் சுக்கிரன் கெட்டுப் போனால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது என்று மாலைமலரில் எழுதுவதால் பெரியவனின் வாழ்க்கையை முக்கியமாக தெரியப்படுத்தவும். நானே வாழ்க்கையை இழந்து நிற்கிறேன். என் பையன்களும் அப்படி ஆகக் கூடாது அல்லவா?
பதில்:
சிங்கம் போல இரண்டு ஆண்மக்களைப் பெற்றுள்ள உனக்கு இனிமேல் என்னம்மா குறைவரப் போகிறது? பிள்ளைகள் வளர்ந்து தலையெடுத்து விட்டால் தகப்பன் இன்றி அவர்களை வளர்க்க நீ பட்ட கஷ்டத்தை உணர்ந்து உன்னை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்களே?
ஒரு குறிப்பிட்ட ஜாதகத்திற்கு நான் தரும் பதிலை மற்ற ஜாதகத்திற்கு பொருத்திப் பார்ப்பது தவறு. இதனால்தான் பரிகாரங்களை நான் வெளிப்படையாக எழுதுவது இல்லை. ஒரு டாக்டர் தரும் மருந்து எல்லா காய்ச்சல்காரனுக்கும் ஒன்று போல இருப்பது இல்லை.
பெரியவனுக்கு மகரலக்னம், மகரராசியாகி, சனியும் சந்திரனும் பரிவர்த்தனை பெற்று ஒன்பதில் கேதுவுடன் இணைந்த குரு லக்னத்தைப் பார்த்த யோக ஜாதகம். சுக்கிரன் எட்டில் மறைந்தாலும் சுக்கிரதசை வரப்போவது இல்லை என்பதோடு அம்சத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றது சிறப்பு. 18 வயதிற்கு மேல் இவனுக்கு ஆரம்பிக்கும் ராகுதசையில் இருந்து யோகம் செயல்பட ஆரம்பித்து வாழ்க்கை நன்றாக இருக்கும். இவனுடைய ஜாதகத்தில் ராகுவையும், கேதுவையும் ஜோதிடர் தவறாக தலைகீழாக எழுதி இருப்பதால் திருத்திக் கொள்ளவும். இளையவனுக்கும் யோகஜாதகம்தான்.
எஸ். மணி, கூவம் கிராமம்.
கேள்வி:
சூ பு | |||
செவ் கே | ராசி | குரு | |
சுக் | ல,சனி ரா | ||
சந் |
35 வயதாகியும் என் மகனுக்கு திருமணத்தடை ஏற்படுகிறது. திருமணம் எப்பொழுது அல்லது திருமண ப்ராப்தம் இல்லையா?
பதில்:
மகனுக்கு சிம்மலக்னம், துலாம்ராசியாகி, லக்னத்தில் சனி ராகு, ஆறில் சுக்கிரன் ஏழில் செவ்வாய் கேது, லக்னாதிபதி சூரியன் எட்டில் நீச புதனுடன் இணைந்து புத்திரகாரகனும் ஸ்தானாதிபதியுமான குருவும் உச்ச வக்கிரம் பெற்று பனிரெண்டில் மறைந்து கடுமையான தாரதோஷமும் புத்திர தோஷமும் அமைந்த ஜாதகம்.
லக்னமும், லக்னாதிபதியும் கெட்டாலே வாழ்க்கைக்கு தேவையான சுகங்கள் கிடைக்காது என்பதை அடிக்கடி எழுதுகிறேன். அதுபோல சுக்கிரனும் குருவும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இணைந்தாலோ, சமசப்தமமாக நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலோ சுக்கிரனின் தாம்பத்ய சுகத்தை குரு தரவிடமாட்டார். குருவின் புத்திர சுகத்தை சுக்கிரன் தரவிடமாட்டார்.
ஏழரைச்சனியும் நடந்து கொண்டிருப்பதால் எல்லாமே தடையாகத்தான் இருக்கும். லக்னாதிபதி சூரியனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள். 2015 இறுதி அல்லது 2016ல் சனிதசை ஆரம்பித்ததும் திருமணம் நடக்கும்.
கே. கல்யாணி, மாடம்பாக்கம்.
கேள்வி:
ல | குரு கே | சூ,பு சுக் | |
ராசி | சனி | ||
செவ் | |||
சந் | ரா |
என் கணவர் என்னையும் மகனையும் சென்னையில் விட்டுவிட்டு தன் தாயார் வீட்டிலிருந்து வேலைக்குப் போகிறார். எப்பொழுது எங்களுடன் இருப்பார்? இன்னும் எத்தனை நாள் நாங்கள் பிரிந்திருப்போம்?
பதில்:
உங்களின் விருச்சிகராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. கணவர் மற்றும் மகனின் ராசி என்னவென்று தெரிந்தால்தான் தெளிவாக பதில் தர முடியும். உங்கள் ஜாதகப்படி 2016 ல்தான் குடும்பம் ஒன்று சேரும்.
அ. ஷண்முகம், மின்னாம்பள்ளி.
கேள்வி:
ராசி | ரா | ||
ல,சூ,பு கே,செவ் | |||
சுக் | சனி சந் குரு |
மூன்று வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை விரும்பி நான் வேறு ஜாதி என்பதால் அவள் வீட்டில் மறுத்துவிட்டார்கள். என் திருமணம் எப்பொழுது நடைபெறும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? பெயர் மாற்ற வேண்டுமா?
பதில்:
மகரலக்னம், கன்னிராசி, லக்னத்தில் சூரி புத செவ் கேது. ஏழில் ராகு ஒன்பதில் குரு, சனி பனிரெண்டில் சுக்கிரன்.
லக்னத்தில் உச்சசெவ்வாய் அமர்ந்து ஏழாமிடத்தில் உள்ள ராகுவைப் பார்த்தும் ராசியில் சனி அமர்ந்து ராசிக்கு ஏழைப் பார்த்தும், சுக்கிரன் பனிரெண்டில் அமர்ந்து கடந்த சில வருடங்களாக ஏழரைச்சனியும் நடந்ததால் திருமணவிஷயத்தில் நீங்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. 2015ல் கண்டிப்பாகத் திருமணம் நடக்கும். சுறுசுறுப்பாக பெண் பார்க்கவும். ஜாதகம் யோகமாக இருப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொண்டால் எதிர்காலம் நன்றாகவே இருக்கும். பெயரை மாற்றுவதால் பெயரை மாற்றி வைப்பவருக்குத்தான் லாபம். உங்களுக்கு இல்லை.
ஆர். ராம்கி, குரோம்பேட்.
கேள்வி:
குரு | |||
ல | ராசி | சந் கே | |
சுக் ரா | |||
பு சனி | சூ செவ் |
ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன். மற்றவர் ஜாதகத்தை துல்லியமாக கணிக்கும் அளவிற்கு என் ஜாதகத்தை கணிக்க முடியவில்லை. சிறுவயது முதல் மருத்துவராக ஆசை. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் சேர முடியவில்லை. பொறியியல் படிப்பில் பல்கலைக்கழக பதக்கம் பெற்றேன். இந்தியாவில் மேல் படிப்பு படிக்க விருப்பம் இல்லை. என் படிப்புக்கு ஏற்ற வேலையும் இங்கு இல்லை. ஐ.ஏ.ஏஸ் தேர்வு எழுத படித்து வருகிறேன். படிப்பு, வேலை அனைத்தும் தடையாகிறது. திருமணம் அந்நிய மதத்தில் நடக்கும் என்று தெரிந்து கொண்டேன். உண்மையா? எந்தத்துறை எனக்கு ஏற்றது? வாழ்வு ஒளி பெறுமா? வழிகாட்டுங்கள்.
பதில்:
இரண்டு வருடம் ஜோதிடம் கற்றவுடனேயே திருமணம் அந்நியமதத்தில் நடக்கும் என்று தெரிந்துவிட்டதே! சபாஷ். உங்கள் ஜோதிடஅறிவை எண்ணி வியக்கிறேன். நீங்கள்தான் எனக்கு குருநாதர்.
கும்பலக்னம், ஐந்தில்குரு, ஆறில் சந்,கேது. பத்தில் சூரி,செவ். பதினொன்றில் புத,சனி. பனிரெண்டில் சுக்,ராகு. ஒருவர் மருத்துவராக வேண்டும் என்றால் பத்தாமிடத்தோடு குருபகவான் சம்மந்தப்பட வேண்டும். உங்களுக்கு அது இல்லை. கும்பத்திற்கு புதன்தசையில் முதல் எட்டரை வருடம் எட்டுக்குடைய பலன்தான் நடைபெறும். எனவே அனைத்தும் தடையாகிறது.
அஷ்டமாதிபதியின் தசை நடப்பதால் இலக்கின்றி அலைகிறீர்கள். புதன்தசை சந்திரபுக்தியில் 2016ல் வெளிநாட்டில் இருப்பீர்கள். நீங்கள் படித்த படிப்புத்தான் உங்களுக்கு ஏற்றது. புதன் எட்டுக்குடையவனாகி வெளிநாட்டைக் குறிப்பதாலும் அடுத்து வரும் கேதுதசை கடகத்தில் சந்திரனுடனும், அதனையடுத்த சுக்கிரன் ராகுவுடன் இணைந்து பனிரெண்டாம் இடமான சரராசி மகரத்தில் இருப்பதாலும் நீடித்து வெளிநாட்டில் வேலை செய்வீர்கள். லக்னத்தையும், லக்னாதிபதியையும் குரு பார்ப்பதால் எதிர்காலம் கவலைப்படும்படி இருக்காது.