adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 12 (11.11.14)

எஸ்.சம்பத், மேட்டுதானம்பட்டி.

கேள்வி :
சந் குரு சூ பு,கே  சுக் சனி
செவ் ராசி  ல
ரா
என் மகன் ஜாதகப்படி ஒரு காலக் கட்டத்தில் நான் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டும் என்று உள்ளூர் ஜோதிடர்கள் குழப்புகிறார்களே உண்மையா?
பதில்:
உள்ளூர் ஜோதிடர்கள் சொன்னாலும் சரி, உலக ஜோதிடர்கள் சொன்னாலும் சரி. இது போன்ற பலன்கள் எல்லாம் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படவே இல்லை. ஜோதிடத்தை ஜோதிடமாக சொல்கிற ஜோதிடரைப் பாருங்கள். கதை அடிக்கிற ஜோதிடர் வேண்டாம்.
நீங்களும் உங்கள் மகனும் ஒரே லக்னம் கடக லக்னம். இருவரும் ஒரே லக்னம் என்பதால் ஒருவருக்கொருவர் மாறாத அன்பும் பாசமும் கொண்டவராக பிரியாமல் இருப்பீர்கள். உங்களை விட உங்களின் மகனின் ஜாதகம் யோகஜாதகம். மகனின் ஜாதகத்தில் மகரராசியாகி லக்னத்தை லக்னாதிபதி பார்க்கிறார். உங்கள் மீன ராசிக்கு அஷ்டமச்சனி முடிந்து விட்டதாலும் மகனின் மகர ராசிக்கு யோக காலம் ஆரம்பிப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இனிமேல் நீடித்து இருக்கப் போகிறது.
ஆனால் ஒன்று மகனின் ஜாதகத்தில் சூரியனும், சனியும் இரண்டாம் வீட்டில் ஒன்று சேர்ந்து மகனின் 43வது வயதில் சனி தசை ஆரம்பிக்க இருப்பதால் அப்போது நீங்கள் மகனை விட்டு நிரந்தரமாக பிரிந்து தான் ஆகவேண்டும்.
செ. சரவணராஜா, குகை, சேலம்.
கேள்வி:
சனி ரா சந், சுக் செவ் குரு
ராசி  பு
 கே
இப்போது குடியிருக்கும் நாற்பது வருட பழமையான வீட்டை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட முடியுமா? மூலதனம் இல்லை. இருக்கும் காலி மனையை விற்றுத்தான் கட்ட முடியும். காலிமனை நல்ல விலைக்கு விற்குமா? நடக்கும் சனி தசையில் எந்த புக்தியில் வீடு கட்ட முடியும்?
 
பதில்:
நடக்கும் சனி தசை சுக்கிர புக்தியிலேயே சுக்கிரன் ஆட்சி பெற்றதாலும் உச்ச சந்திரனுடன் இணைந்திருப்பதாலும் வீடு கட்ட முடியும். 2016ல் புதிய வீட்டில் இருப்பீர்கள்.
அர்சுனன், சேலம்
கேள்வி :
சூ பு  ரா
 சந் சுக் ராசி
கே குரு செவ் சனி
பிறந்தது முதல் இன்று வரை ஒரு நொடி கூட மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. போட்டித் தேர்வு பல எழுதியும் வெற்றி இல்லை. வீட்டிற்கு உதவாத வீணாய் போனவனாக இருக்கிறேன். இப்படித்தான் கஷ்டப்பட வேண்டுமா? வாழ்க்கை கடைசி வரை இப்படித்தான் இருக்குமா? வேலை, மண வாழ்க்கை எப்போது? எந்த தெய்வத்தை கடைசி வரை விடாமல் வணங்க வேண்டும்?
பதில்:
மீன லக்னம், கும்ப ராசியாகி லக்னாதிபதி குருபகவான் எட்டில் மறைந்து வக்கிரம் பெற்று, அவருக்கு வீடு கொடுத்த களத்திரகாரகன் சுக்கிரனும் பனிரெண்டில் மறைந்து, லக்னத்திற்கு ஏழிலும், ராசிக்கு எட்டிலும் செவ்வாய் சனி இணைந்து, இரண்டாம் வீட்டில் ஆறுக்குடைய சூரியன் உச்சம் பெற்ற ஜாதகம். நான்கில் ராகு.
லக்னாதிபதி குரு எட்டில் மறைந்து அம்சத்தில் நீசம் பெற்றது மிகப் பலவீனம். மனைவியைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் செவ்வாய், சனி இணைந்ததும் தோஷம். லக்னாதிபதி வலுவிழந்தாலே வாழ்க்கைக்கு தேவையானது கிடைக்காது. அதோடு லக்னாதிபதியான குருவின் தசையும் நடக்க இருக்கிறது. குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள். அருகில் உள்ள சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபடுங்கள். அவரே உங்களுக்கு அருள் தரும் தெய்வம்.
ஆர். கோவிந்தசாமி, கல்லுக்குழி, திருச்சி.
கேள்வி :
குரு ல,சனி கே
ராசி
செவ்  சூ பு
ரா சந் சுக்
சர்க்கரை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இடதுகால் எடுக்கப்பட்டு ஊனமுற்றவனாக நடக்க முடியாமல் சிரமப்படுகிறேன். அரசு உதவி மற்றும் மூன்று சக்கரம் வாகனம் வேண்டி மனு செய்திருக்கிறேன். கிடைக்குமா? சொத்துப்பிரச்சினை தீருமா? தம்பியுடன் உள்ள வழக்கு எப்போது எப்படி தீரும்?
பதில்:
மேஷ லக்னம் கன்னி ராசி. லக்னத்தில் சனி, கேது, ஐந்தில் சூரியன், புதன், ஆறில் சுக்கிரன், பத்தில் செவ்வாய், பனிரெண்டில் குரு.
பாபக்கிரகங்கள் லக்னாதிபதியாகவே வந்தாலும் உச்சவலுப் பெறக்கூடாது என்ற எனது “பாபக்கிரங்களின் சூட்சும வலுத் தியரி”க்கு உங்கள் ஜாதகமும் இன்னொரு உதாரணம்.
லக்னாதிபதி செவ்வாய் பரிபூரண உச்சமாகி, லக்னத்தில் நீசவக்ரமாகி உச்சபலம் பெற்ற சனியுடன் பரிவர்த்தனையாகி லக்னத்திற்கு சுபபலம் கிடைக்காததால் லக்ன சனியின்படி கால் ஊனமடைந்தீர்கள். சனி வக்ரம் அடையாமல் வெறும் நீசம் மட்டும் ஆகியிருந்தால் ஊனமில்லை. தற்போது மேஷ லக்னத்திற்கு வரக்கூடாத ஆறுக்குடைய புதன்தசை நடக்கிறது.
இதுவரை ஏழரைச் சனியாலும் கஷ்டப்பட்ட உங்களுக்கு சனி முடிந்து விட்டதால் இனி அரசு உதவியும் நிம்மதியும் கிடைக்கும். ஆறுக்கதிபதியே இளைய சகோதரனைக் குறிக்கும் மூன்றாமிடத்திற்கும் அதிபதியாகி ஐந்தில் இருப்பதால் பூர்வீக சொத்து விஷயமாக தம்பியுடன் நடக்கும் வழக்கு இன்னும் நான்கு வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும்.
மூ. கோட்டைச்செல்வம், ராமநாதபுரம்.
கேள்வி :
எனக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகவே பிளஸ்டூவுடன் படிப்பை நிறுத்தி விட்டேன். சென்னையில் வேலை செய்கிறேன். கிரிக்கெட் கிளப்பில் வேலை செய்து கொண்டு அப்படியே பயிற்சியில் ஈடுபடலாம் என்று நினைக்கிறேன். இதில் போகலாமா? பிற்காலத்தில் திறமையான வீரராக வர முடியுமா?
பதில்:
“எதை முழு மனதுடன் நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்று நமது மேலான உன்னத மதம் சொல்கிறது. ஜாதகம், ஜோதிடம் எல்லாம் இரண்டாம் பட்சம். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு இணங்க சிறு வயதில் இருந்து உங்கள் கவனத்தை சிதறவிடாமல் எந்த விஷயத்தில் ஈடுபாட்டுடன் முழு முயற்சி செய்கிறீர்களோ அந்தத்துறையில் நூறு சதவீதம் ஜெயிப்பீர்கள் என்பது உறுதி. கிரிகெட்டின் கடவுள் சச்சின் தெண்டுல்கரே இதற்கு நல்ல உதாரணம்.
உங்கள் பிறந்த தேதியை அனுப்பிய நீங்கள் பிறந்த நேரம், இடத்தை குறிப்பிடவில்லை. எனவே ஜோதிடரீதியாக என்னால் துல்லியமாக பதில் சொல்ல இயலவில்லை. ஆனால் நீங்கள் பிறந்த அன்று செவ்வாய் வலுவாக இருப்பதால் விளையாட்டுத் துறையில் நிச்சயம் ஜெயிப்பீர்கள்.
ஜி.ஆர், கோவை.
கேள்வி :
சனி ரா,ல சந்
ராசி
 சுக் சூ பு செவ்,கே குரு
கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது. கொடுத்தவர்கள் அதிகம் நெருக்கடி கொடுக்கிறார்கள். தினமும் அவமானம். என்னுடையதும் மகனுடைய ஜாதகமும் அனுப்பியுள்ளேன். கடன் தீருமா? குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளத் தோன்றுகிறது. விரைவில் பதில் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
மீன லக்னம் ரிஷப ராசி. லக்னத்தில் சனி, ராகு, ஏழில் செவ்வாய், குரு, ஒன்பதில் சூரியன், புதன், பத்தில் சுக்கிரன். குருதசை சந்திரபுக்தி நடப்பு.
லக்னாதிபதி குரு கேதுவுடன் இணைந்தும், கடன் ஸ்தானாதிபதி சூரியனின் சாரம் பெற்றும் வக்ரசனியின் பார்வை வாங்கியும் தசை நடத்துவதால் கடன் தொல்லைகள். குறிப்பாக 2010த்திற்கு பிறகு நடந்த சுக்கிரபுக்தியில் ஏடா கூடமாக கடன் தொல்லையில் சிக்கி இருப்பீர்கள்.
தர்மகர்மாதிபதி யோகம் இருந்து லக்னத்தையும், ராசியையும் குரு பார்ப்பதால் உங்களால் எதையும் சமாளிக்க முடியும். நல்லவராக இருப்பதால் அவமானத்திற்கு பயப்படுகிறீர்கள். அவ்வளவுதான். கடவுள் ஒரு போதும் உங்களை கைவிடமாட்டார். ஜனவரிமாதம் ஆரம்பிக்க இருக்கும் யோகாதிபதி செவ்வாய் புக்தியில் கடனை அடைப்பதற்கு நிச்சயம் வழி பிறக்கும். ஒரு முறை ஜென்ம நட்சத்திரமன்று குடும்பத்துடன் ஆலங்குடி சென்று தரிசித்து வாருங்கள். அனைத்துப் பிரச்சினைகளும் தீரும்.
வி. ஆர். மீனாட்சி,
சென்னை - 05.
கேள்வி:
சூ,குரு கே,சுக் பு  சந் ல
ராசி  சனி செவ்
 ரா
பத்து வருடங்களாக குழந்தை இல்லை. காதல் திருமணம் என்பதால் பொருத்தம் பார்க்கவில்லை. இந்த குரு தசையில் உடம்பு படுத்தி எடுத்து விட்டது. கர்ப்பம் தரித்தும் சில நேரங்களில் கலைந்து விட்டது. நம்பிக்கையுடன் பரிகாரமும் மருத்துவமும் செய்து கொண்டு இருக்கிறேன். புத்திர பாக்கியம் உண்டா? எப்பொழுது? குருஜி அவர்கள் நல்லவாக்கு சொல்லுங்கள்.
 
பதில்:
பதினாறு வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூட பரம்பொருளின் அருளினால் நான் சொன்ன மாதத்தில் குழந்தை பிறந்திருக்கிறது. கவலை வேண்டாம். காந்தர்வ மனம் எனப்படும் காதல் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கத் தேவை இல்லை.
மீனாட்சிக்கு கடக லக்னம், மிதுன ராசி, இரண்டில் சுக்கிரன், செவ்வாய். நான்கில் சூரியன், புதன், சனி. ஐந்தில் குரு, கேது. கணவர் சுப்ரமணியத்திற்கு மிதுன லக்னம், மிதுன ராசி இரண்டில் சனி, செவ்வாய். ஐந்தில் ராகு, பதினொன்றில் சூரியன், குரு சுக்கிரன். பனிரெண்டில் புதன்.
கடக லக்னத்திற்கு குரு ஆறுக்குடையவனாகி தனது தசையின் ஒரு பகுதியில் ஆணாக இருந்தால் கடன் தொல்லைகளையும் பெண்ணாக இருந்தால் நோய் பாதிப்புகளையும் செய்வார். உங்கள் இருவரின் ஜாதகத்தில் ஐந்தாமிடத்திலும், புத்திரகாரகன் குருவோடும் ராகுகேதுக்கள் சம்மந்தப்பட்டதும், ஐந்தாமிடத்தை பாவிகள் பார்த்ததும், கணவரின் ஜாதகத்தில் குருபகவான் சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தமனம் ஆனதும், இருவருக்கும் மிதுன ராசியாகி கடந்த மூன்று வருடங்களாக கோட்சாரத்தில் புத்திரபாவத்தில் உச்சசனி அமர்ந்ததும் குழந்தை பாக்கியத்திற்கு தடை ஏற்படுத்திய விஷயங்கள்.
அதே நேரத்தில் இருவரின் ஜாதகத்திலும் ஐந்துக்குடையவன் ஐந்தாமிடத்தை பார்ப்பதாலும், தற்பொழுது கோட்சாரத்தில் சனி விலகி விட்டதாலும் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. குருபகவானை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை இன்னும் செய்யவில்லை என ஜாதகத்தில் தெரிகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் மாலை மலரில் அந்த பரிகாரங்களை எழுதியிருந்தேன். தேடிப்படிக்கவும். 2016ம் ஆண்டு கையில் பெண் குழந்தை இருக்கும்.
எல். ஆர். சந்திரமோகன்,
காளப்பநாயக்கன்பட்டி.
கேள்வி:
மனைவி படும் துயரம் பார்க்க சகிக்கவில்லை. அவளுக்கு ஏதேனும் நடக்கும் முன்பு ஒரே மகளின் திருமணத்தை நடத்தமுடியுமா? நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறேன். உங்களின் பதிலை மலைபோல நம்பியிருக்கிறேன்.
பதில்:

2015ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் தேதியில் இருந்து அக்டோபர் 24ம் தேதிக்குள் குறிப்பாக ஆவணி மாதம் உங்கள் மகளின் திருமணம் ஜாம் ஜாம் என நடக்கும். மகளின் திருமணத்தை உங்கள் மனைவி கண்குளிர பார்ப்பார். அவள் மூலமான பேரன் பேத்திகளையும் கொஞ்சுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *