ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
ஆர். பாண்டியன், கரூர்.
கேள்வி:
ஜோதிட அரசருக்கு பணிவான வணக்கம். எந்த ஊருக்குச் சென்றாலும் மாலைமலர் வாங்கி படிக்கும் வாசகன் நான். 2018ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். தற்போது ஆன்மிகம், விவசாயம், அரசியல், சமூகப் பணி என்று அலைந்து கொண்டிருக்கிறேன். மகன் சென்னையில் இருக்க, மகள் சொந்த ஊரில் இருப்பதால் மகள் வழியே உணவு கிடைத்து விடுகிறது. பொருளாதாரச் சூழல் மட்டும் மாறி மாறி வருகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினராக சுயேச்சையாக நின்று இரண்டாம் இடம் பெற்றேன். மனத்தெளிவும், ஆயுள் பலமும் எப்படி இருக்கிறது என்று அறிந்து இனிமேல் என் வாழ்க்கை எவ்வாறு செல்லும் என்று இலக்குகள் நிர்ணயித்துக் கொள்ள தங்களை வேண்டி நிற்கிறேன். இனி எந்தப் பாதையில் பயணிப்பது, எனது வெற்றி எதில் அடங்கியுள்ளது என்றும், அதற்கான வாய்ப்புகள் குறித்தும் எனக்கு அறிவுரை வழங்கிட வேண்டுகிறேன்.
பதில்:
(சிம்ம லக்னம், கும்பராசி, 1ல் ராகு, 3ல் சூரி, புத, 4ல் சுக், 5ல் குரு, சனி, 7ல் சந், கேது, 11ல் செவ், 31-10-1960 அதிகாலை 1-26 கரூர்)
அரசுப் பணியை தரும் சிம்மத்தில் ராகு இருப்பினும், வளர்பிறை சந்திரனின் பார்வையாலும், குருவின் பார்வையாலும் சிம்மம் வலுவாகி, சூரியன் நீச்ச பங்கம் அடைந்ததால் அரசுப்பணியில் இதுநாள்வரை இருந்தீர்கள். ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் வாழ்க்கையில் ஓய்வு பெற்று விட்டதாக அர்த்தமில்லை. இன்னும் சொல்லப்போனால் வாழ்வில் அதிகமாக சாதித்தவர்கள் அவர்களுடைய 60 வயதிற்கு பிறகு சாதித்தவர்கள்தான்.
இதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ உலகப் பெரியவர்களை சொல்லலாம். இன்னும் ஏன்? பெரியார் என்று நம்மால் அன்புடன் அழைக்கப்படும் நம்முடைய தமிழகத்தின் மிக உயர் பெருமையின் அடையாளமான தந்தை பெரியார் அவர்கள் ஏறத்தாழ 35 ஆண்டுகாலம் இந்த தமிழகத்தைச் சுற்றி சுற்றி வந்து சாதித்தது அவரது 60 வயதிற்கு மேல் தான். தமிழகத்தின் இன்னொரு வசீகர அடையாளமான எம்ஜிஆர் அவர்கள் தனது அறுபது வயதிற்கு மேல் தான் மிக உயர் அமைப்பான முதலமைச்சர் பதவியை அடைந்தார். 60 வயதிற்கு மேல் ஆக்கப் பணிகளை சாதித்த எத்தனையோ நபர்களில் நீங்களும் ஒருவராக இருக்க முடியும்.
உங்கள் ஜாதகப்படி ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளை செய்து, மக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ள வைக்கும் சனியே, அதிக சுபத்துவம் உள்ள கிரகம் என்பதால் உங்களுக்கு அரசியல் மற்றும் சமூகப் பணிகள் மூலம் வெற்றி கிடைக்கும். உங்களுடைய பணிகளை ஆன்மிகம் மற்றும் அரசியல் சார்ந்த வைத்துக்கொள்வது நல்லது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்வதைப்போல ஆன்மீக, அரசியல் பாணியில் உங்களுடைய வழியை அமைத்துக் கொள்வது எதிர்காலத்தில் உங்களுக்கு மிகச் சிறப்பான வெற்றியை தரும்.
2021 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சுக்கிர தசை சனி புக்தி முதல் சனி சுபத்துவம் பெற்று இருப்பதால், உங்களுடைய ஆன்மீக, அரசியல் பணிகள் மேன்மையை தரும். அடுத்து வர இருக்கும் சூரியதசை உங்களுக்கு லக்னாதிபதி தசை என்பதால் புகழ் வெளிச்சத்தை உங்கள் மேல் படர வைக்கும்.
அந்திம காலம் வரை பொருளாதாரத்தில் மிகப் பெரிய குறைகள் எதுவும் இருக்காது மகன், மகள் கை கொடுப்பார்கள். ஆயுள் உள்ளவரை ஆரோக்கியமாக இருப்பீர்கள். எட்டாம் அதிபதி ஆட்சிபெற்று, ஆயுள்காரகன் சுபத்துவமாக இருப்பதால் 78 வயதிற்கு குறையாத ஆயுள் உண்டு, வாழ்த்துக்கள்.
(25.02.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.