adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
தவறாக பலன் சொல்லி விட்டேனா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

கண்மணி. எஸ். செல்வராஜ், சேலம்.

கேள்வி:

நீண்டகாலமாக திருமண தகவல் நிலையம் நடத்தி வருகிறேன். ஜோதிடமும் கற்றுக் கொண்டு நானே திருமண ஆலோசனை மற்றும் பொருத்தமும் சொல்லுகிறேன். சமீபத்திய மாலைமலரில் “என் காலத்திற்குப் பிறகு எனது சூட்சுமவலு கோட்பாடு 100% உண்மை என்று உணரப்படும்” என எழுதி இருந்தீர்கள். என்னைப் போன்று உங்களை விட வயதில் மூத்த, உங்களின் சீடர்கள் இன்னும் இருக்கும் போது இளம் வயதினரான நீங்கள் எங்களுக்கு  வருத்தம் வரச் செய்யும் இத்தனை கடுமையான வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டாம் என்பது என்னுடைய பணிவான கருத்து. ஜோதிடம் உள்ளவரை எங்கள் குருவான நீங்களும் இருப்பீர்கள். எனது அலுவலகத்திற்கு வரன் பார்த்து தர வந்த ஒரு ஆண் ஜாதகருக்கு இன்னும் ஒரு வருட காலம் அதாவது ஜாதகருக்கு குரு தசை முடியும் அடுத்த வருடம் வரை திருமணத்தை தள்ளிப் போடவும் என்று பரிந்துரைத்தேன். திருமணம் என்ற சுப நிகழ்ச்சி நடக்க வேண்டிய குடும்பத்தில் என்னால் தவறான ஆலோசனை தரப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் என்னுள் எழுந்ததால், கடந்த ஒன்றரை மாதங்களாக என்னால் தூங்க முடியவில்லை. நான் சொன்ன இந்த பலனுக்கு நீங்கள் கடந்த மேமாதம் மாலைமலரில் எழுதியிருந்த பாதகாதிபதி தசையில், அஷ்டமாதிபதி புத்தியில் மரணமடைந்த ஒரு கணவரின் விளக்கமே காரணம். நான் சொன்னது சரியா அல்லது தவறா? எப்போது இந்த வரனுக்கு திருமணம் நடக்கும்?

பதில்: 

(மிதுன லக்னம், துலாம் ராசி, 1ல் குரு, 2ல் கேது, 5ல் சந், செவ், 6ல் சூரி, புத, 7ல் சுக், சனி, 8ல் ராகு, 25- 11- 1989 இரவு 8-12 சேலம்)

வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எந்த ஒரு ஜோதிடராலும் நூறு சதவிகித சரியான பலன் சொல்ல முடியாது. ஓரளவிற்கு 80 சதவிகிதம் சரியாக செல்பவர் வெற்றிகரமான ஜோதிடராகிறார். தவறாகி விடுமோ என்பதற்காக பலன் சொல்லத் தயங்கலாமா? தான் சொன்ன பலன் தவறு என்று பின்னால் ஒரு ஜோதிடரால் உணரப்படுமானால், தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டியது மட்டும்தான் ஜோதிடரின் கடமையே தவிர, அதற்காக குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை.

மிக மிக முக்கியமாக ஒரு ஜாதகருக்கு நடக்கும் நன்மை, தீமைகளை ஒரு ஜோதிடர் கண்டிப்பாகத் தடுக்கவே முடியாது. நடப்பவை அனைத்தும் சம்பந்தப்பட்டவரின் கர்மாவின் படியே நடக்கிறது என்று வேத ஜோதிடம் சொல்லுகிறது. ஜாதகருக்கு நேரம்  நன்றாக இருக்கும் பொழுது அனைத்தும் சரியாகவே நடக்கும். நீங்கள் கொடுத்துள்ள ஜாதகத்தின்படி குரு தசையில் திருமணம் நடத்தக் கூடாது, தள்ளிப் போடவும் என்று சொன்னது சரிதான். இதுபோன்ற அமைப்பில் திருமணத்தை தள்ளிப் போடவும் என்று சொல்வதைவிட நடக்காது என்று உறுதியாகச் சொல்லி விடலாம்.

தசாநாதனும், புக்திநாதனும் சஷ்டாஷ்டகமாக இருக்கும் நிலையில், அங்கே நல்லபலன் நடப்பதில்லை. மேலும் இந்த ஜாதகத்தில் எட்டில் இருக்கும் ராகு, சனியின் வீட்டில் செவ்வாயின் பார்வையில் இருப்பதால் கடுமையான கெடுபலன்களைச் செய்வார். ஜாதகருக்கு 7ம் இடத்தில் சுக்கிரன், சனி இணைந்துள்ள நிலையில், லக்னாதிபதி புதன் ஆறில் மறைந்து பலவீனமாக உள்ளதால் தாமத திருமணம்தான் நடக்கும். இரண்டு எட்டில் ராகு கேதுக்கள் இருப்பதும் இதை உறுதி செய்கிறது.

அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்க இருக்கும் சனிதசையின் நாதன் சனி, சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து, சுக்கிரனோடு எட்டு டிகிரிக்குள் இணைந்து, குருவின் பார்வையில் சுபத்துவமாகி திக்பலம் எனும் சூட்சும வலுவையும் அடைந்திருப்பதால், சனியே இந்த ஜாதகருக்கு திருமணம், புத்திர பாக்கியம் அதாவது தாம்பத்திய சுகம், புத்திர சுகம் ஆகியவற்றைத் தரக் கடமைப் பட்டவர். 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில்தான் இந்த ஜாதகருக்கு திருமணம் நடக்கும். வாழ்த்துக்கள்.

(26.11.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.