ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
எஸ். கிருஷ்ணமூர்த்தி, தேனி.
கேள்வி.
நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். ரிட்டையராகி 13 ஆண்டுகள் ஆகின்றன. என் உறவினர்கள் என்னிடம் வாங்கிய பணம் அனைத்தும் எனக்கு திரும்ப கிடைக்குமா? எனது எதிர்காலத்தை பற்றி சில குறிப்புகள் எழுதி அனுப்புமாறு வேண்டுகிறேன்.
பதில்.
(தனுசு லக்னம், விருச்சிக ராசி, 2ல் கேது, 3ல் சுக், 4ல் சூரி, புத, 6ல் சனி, 7ல் செவ், 8ல் குரு, ராகு, 17-3-1944, அதிகாலை 1-10 தேனி)
75 வயதாகும் உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும் என்று தெரியவில்லை. அதேநேரத்தில் இதைப் படிக்கும் ஜோதிட ஆர்வலர்களுக்கு கடந்த காலத்தில் நீங்கள் ஏன் ஆசிரியராக இருந்தீர்கள் என்பதைச் சொல்ல முடியும்.
எனது சுபத்துவ, சூட்சுமவலுக் கோட்பாட்டின்படி சிம்மமும், சிம்மாதிபதி சூரியனும் சுபத்துவமாகியுள்ளதால் வாழ்நாள் முழுவதும் வருமானம் வரும் அரசுப்பணியில் இருந்தீர்கள். அரசு வேலைக் கிரகமாகிய சூரியனை, உச்ச குரு பார்த்து, ராசிக்குப் 10-ஆம் இடம் சிம்மமாகி, அதனைத் தனிச் சுக்கிரன் பார்த்து, லக்னத்திற்கு பத்தாம் இடத்தை சுபத்துவ சூரியன் பார்த்ததால் உங்களுக்கு அரசுப் பணி கிடைத்தது.
அரச கிரகங்களான சூரியனையும், சந்திரனையும், உச்ச குரு பார்த்தது சிறப்பு. இதனால் வாழ்நாள் முழுவதும் பிறர் கையை எதிர்பாராத வருமானம் உடையவராக இருப்பீர்கள். கடந்த சில வருடங்களாக உங்களின் கேட்டை நட்சத்திரத்திற்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருந்ததால் மன உளைச்சல் வர வேண்டும் என்பதன்படி கொடுத்த பணம் எதுவும் திரும்பி வந்து இருக்காது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருப்பீர்கள்.
பணம் முழுவதுமாக திரும்பி வர வாய்ப்பில்லை. போன ஜென்மத்தில் இப்போது பணம் கொடுத்தவர்களிடம் நீங்கள் கடன் வாங்கி இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் அல்லது அடுத்த ஜென்மத்தில் அவர்களை நீங்கள் ஏமாற்றப் போவதாக சமாதானப்படுத்திக் கொள்ளலாம். எட்டில் குரு வலுத்து இருப்பதாலும், எட்டுக்குடையவன் குருவின் பார்வையில் இருப்பதாலும், ஆயுள்காரகன் சுபத்துவம் பெற்று இருப்பதாலும், இன்னும் சில ஆண்டுகள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
(09.07.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.