ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
கிருபாகரன், கோபி.
கேள்வி.
என் நண்பன் மூன்று வருடங்களுக்கு முன் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணத்தை நிறுத்தி விட்டான். முதலில் சம்மதம் சொன்னவன் திருமண தேதி குறித்த பிறகு சம்மதம் இல்லை என்று சொல்லி விட்டான். மேலும் தனக்கு ஒரு பெரிய கோடீஸ்வரன் மகள்தான் மனைவியாக வருவாள் என்கிறான். அவன் படித்துள்ளதால் அனைவரும் இவனுக்கு பெண் கொடுக்க போட்டி போடுவார்கள் என்றும் சொல்லுகிறான். அரசியலில் இவன் பெரிய நிலைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறதா? எதிலும் திருப்தி இல்லாமல் அலை பாய்கிறான். இவனது காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்க்கும் திருமணமா?
பதில்.
(மீன லக்னம், கன்னி ராசி, 3ல் புத, சுக், குரு, 4ல் சூரி, 6ல் கேது, 7ல் சந்திரன், 10ல் சனி, 12ல் செவ், ராகு, 23-6-1988 அதிகாலை 12-9 கோபி)
கேள்வியைப் பார்த்தால் பக்கத்துக்கு இலைக்கு பாயசம் போடுங்கள் என்று சொல்வது போல இருக்கிறது. எனக்கும் சில விஷயங்கள் தெரிகிறது. சரி.. இது உங்கள் நண்பரின் ஜாதகம்தான். நம்பி விட்டேன்.
நண்பரின் ஜாதகப்படி லக்னத்திற்கு 7க்குடைய புதன் அந்த வீட்டிற்கு திரிகோணத்தில் அமர்ந்து, எவ்வித பாபத் தொடர்புகளும் இன்றி, மிகுந்த சுபத்துவமாக குரு, சுக்கிரனுடன் இணைந்து சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் அவரைவிட எல்லாவகையிலும் தகுதிக்கு மேம்பட்ட, பொருளாதார ரீதியில் உயர்வான இடத்தில் இருந்து பெண் அமையும். ஏழாம் வீட்டைக் குரு பார்ப்பதும், ஏழில் வளர்பிறைச் சந்திரன் இருப்பதும் இதனை உறுதி செய்கிறது.
அதேநேரத்தில் ஏழாம் இடத்தை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பதால் நாட்டிலேயே பெரிய கோடீஸ்வரர் எவரும் இவரைத் தேடி வந்து பெண் கொடுத்துவிட மாட்டார்கள். ஒருவருக்கு மிகப் பெரிய கோடீஸ்வரரின் பெண் அமைவது போன்ற நிகழ்வுகளுக்கு அவரது ராசி, லக்னம் இரண்டின் ஏழாம் இடங்களும் சந்தேகத்திற்கிடமின்றி மிகுந்த சுபத்துவமாக அமைந்திருக்க வேண்டும். அந்த அமைப்பு உங்கள் நண்பருக்கு இல்லை.
அனைத்து விதிகளும் பங்கமின்றி பூரணமாக அமைந்த ஒருவர்தான் எல்லாவற்றிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். ஜாதகத்தில் சுபத்துவமும், பாபத்துவமும் கலந்திருக்கும் நிலையில் ஒருவருக்கு நிறையோடு சேர்ந்து குறைகளும் கலந்த வாழ்க்கை அமைப்புத்தான் இருக்கும். ஜாதகம் பூரண சுப அமைப்பில் இருக்கும்போதுதான் ஒருவர் மிகப் பெரிய உயர் பதவியோ அல்லது மிகுந்த அந்தஸ்தான வாழ்க்கையையோ அடைய முடியும்.
நண்பரின் ஜாதகப்படி ஏழாமிடம் சுபத்துவமாக இருந்தாலும், சனி, செவ்வாய் இருவரும் அந்த வீட்டை பார்ப்பது குற்றம். ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்து லக்னத்திற்கு பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கும். அரசியல் தொடர்பும் கிடைத்து அரசியலில் ஓரளவு நிலைத்தும் இருக்க முடியும். ஆனால் சூரியனை, சனி பார்ப்பதால் அரசியலில் மிக உயர் பதவிகளை அடைய முடியாது. அதற்கு தடை இருக்கிறது.
சனி சூரியனையும் சிம்மத்தையும் பார்த்து உயர் பதவி கிடைக்க வேண்டுமெனில் அந்த சனியை வலுப்பெற்ற குரு பார்த்து சனியின் பார்வை சுபத்துவமாகி இருக்க வேண்டும். மேலும் உங்கள் நண்பர் நினைப்பது போல ஒருவர் மிகப் பெரிய பதவிக்கு வர வேண்டும் எனில், பத்தாம் இடம், சிம்மம், சூரியன் மூன்றும் சேர்ந்து வலுவாக இருக்க வேண்டும்.
ராசியை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பதால் உங்கள் நண்பர் எதிலும் திருப்தி இல்லாமல் அலைகிறார். தற்போது செவ்வாய், சனியோடு தொடர்பு கொண்ட ராகுவின் தசை நடப்பதால் அவருக்கு எதிலும் திருப்தியான அமைப்புகள் நடக்க வாய்ப்பில்லை. 2022 பிறகு வரும் குரு தசை முதல் ஓரளவிற்கு நன்றாக இருப்பார். அடுத்து வரும் சந்திர புக்தியில் அவருக்கு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பெற்றோர் பார்க்கும் திருமணம் நடைபெறும். சுபத்துவ லக்னாதிபதியின் தசை 16 வருடங்களுக்கு நடக்க உள்ளதால் எப்படியும் பிழைத்துக் கொள்வார். வாழ்த்துக்கள்.
(18.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.