ஈ. ராதாதேவி, கோவை-6
கேள்வி :
மகனுக்கு 35 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. பார்த்த பெண் எல்லாம் தடைபட்டு நின்று விடுகிறது. அவனுக்கு நாகதோஷம், களத்திர தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்கிறார்கள். நல்ல தொழில்தான் செய்கிறார். வருமானமும் வருகிறது. இருந்தாலும் பெண் வீட்டார் வீடு, தோட்டம் இல்லை எப்படி பெண் கொடுப்பது என்று கேட்கிறார்கள். திருமண யோகம் எப்போது உள்ளது? திருமணம் நடக்குமா நடக்காதா என்பதை தயவுசெய்து தெரிவிக்கப் பணிகிறேன்.
பதில் :
ல ரா | |||
05.12.1987
இரவு
8.07
கோபி
|
சந் | ||
செ | |||
கே | பு சு சூ,கு | சனி |
மகனுக்கு இன்னும் தாம்பத்திய சுக அமைப்பு வரவில்லை. அதனால் இன்னும் திருமணம் நடக்கவில்லை. உங்கள் மருமகள் இனிமேல் பிறக்கப் போவது இல்லை. எங்கோ பிறந்து உங்கள் மகனுடன் இணைவதற்கு தயாராகத்தான் இருக்கிறார். உங்கள் எதிர் வீட்டில் கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்? பதினெட்டு வயது முதல் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து, பதினெட்டு வருடம் கழித்து முப்பத்தி ஆறு வயதில் எதிர்வீட்டு நண்பரின் மகனுக்கு மகளை கல்யாணம் பண்ணிக் கொடுத்த கதையெல்லாம் இருக்கிறது. கவலைப்படாதீர்கள்.
மகனுக்கு லக்னத்திற்கு ஏழில் ராகு கேதுக்கள் தொடர்பு, ராசிக்கு ஏழில் உச்ச செவ்வாய் என்ற அமைப்பு உள்ள நிலையில், இதுவே லக்னத்திற்கு எட்டில் உச்ச செவ்வாய் என்றாகி, உச்சம் பெற்ற சனியும் ஏழாம் இடத்தைப் பார்க்கிறார். ஏழாம் அதிபதி குருவும் ஆறில் மறைவது குற்றம். இது கடுமையான களத்திர தோஷம். இதைவிட மேலாக புத்திர ஸ்தானமான ஐந்தில் சனி அமர்ந்து, ஐந்திற்குடைய சுக்கிரன் ஆறில் சூரியனுடன் அஸ்தமனமாக, புத்திரகாரகன் குரு 6-ல் மறைகிறார், இது தாமத புத்திர பாக்கிய அமைப்பு.
தாம்பத்திய சுகத்தை கொடுக்கக் கூடிய சுக்கிரன் அஸ்தமனமாகி, வலுவிழந்த நிலையில் இருப்பதால், அவரை அஸ்தமனம் செய்த சூரியனே அவரது பலன்களை தருவார் என்பது என்பதன்படி அடுத்த வருடம் மே மாதம் ஆரம்பிக்கும் சூரிய தசை, சந்திர புக்தியில் மகனுக்கு 2019 நவம்பர் மாதத்திற்குள் திருமணம் நடக்கும். வாழ்த்துக்கள்.
ஆர். ஆனந்த், மும்பை.
கேள்வி :
மணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த பின் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டு, விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வழக்கின் முடிவு என்னவாகும்? நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா? சுய தொழில் செய்ய விரும்புகிறேன். விருப்பம் நிறைவேறுமா?
பதில் :
ரா | ல | ||
7.10.1983
இரவு
10.55
பாண்டி
|
|||
சு செ | |||
கே கு | சந் சனி | சூ பு |
இதுபோன்ற கேள்விகளுக்கு மனைவி மற்றும் குழந்தையின் ஜாதகங்களை வைத்துப் பார்த்துத்தான் பிரிவு இருக்குமா, இருக்காதா என்று துல்லியமான பதில் சொல்ல முடியும். அதாவது கணவன் மனைவி இருவருக்கும் பிரிவு ஏற்படுமா, பிறந்த குழந்தைக்கு தகப்பனை பிரியும் அமைப்பு இருக்கிறதா என்பதை மூவரின் ஜாதகங்களை ஒன்றாகப் பார்த்துத்தான் தெளிவாக அறிய முடியும்.
ஜோதிடம் என்பது ஒருவிதமான விதிகளும், சமன்பாடுகளும் அடங்கிய கணிதம்தான் அனைத்து நிலைகளுக்கும், அதில் சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது துல்லியமான பதில் சொல்லி விடலாம். அதுவே சரியானதாகவும் இருக்கும்.
உங்கள் ஜாதகப்படி 7க்குடைய குரு ஆறில் மறைந்து, ராகு-கேதுக்களுடன் இணைந்திருக்கிறார். லக்னத்தின் குடும்ப வீடான இரண்டாமிடத்தையும், இவை இரண்டின் 7-ஆம் இடத்தையும் உச்சசனி பார்த்து பலவீனப்படுத்துகிறார். இரண்டாம் திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றாம் அதிபதி செவ்வாய் நல்ல நிலையில் இருக்கிறார். மிதுன லக்னமாகி ஐந்தில் சனி இருப்பதும் ஆண் குழந்தையுடன் இருக்க முடியாத அமைப்பு.
தற்போது ஏழாமிடத்தை பார்த்துக் கெடுத்த சனியின் தசை நடைபெறுவதால், உங்களுக்கு முதல் மனைவி விவாகரத்தாகி, இரண்டாவது திருமணமே நிலைக்கும். ஏழரைச்சனி முடிந்து விட்டதாலும், தொழில் ஸ்தானாதிபதி குரு பத்தாம் வீட்டைப் பார்ப்பதாலும், ஒன்பதுக்குடையவன் தசை நடப்பதாலும் சொந்தத் தொழில் செய்யலாம்.
சிவக்குமார் பெருமாள், நாமக்கல்.
கேள்வி :
ஜோதிட ஞான சித்தருக்கு வணக்கம். ஜாதகப்படி சித்தர்களின் தரிசனம் மற்றும் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்குமா? நடக்கப்போவதை உணரும் தன்மை, மருத்துவ உலகிற்கான மூலிகை பற்றிய அறிவு, வானியல் அறிவு, மந்திரங்களை உச்சரித்து தியானம் போன்ற நமக்கு அப்பாற்பட்ட சக்திகளை அறிய முடியுமா என்பதை கிரக சூழ்நிலைகளின் தன்மைக்கு ஏற்ப விளக்க வேண்டுகிறேன். என் ஜாதகப்படி முக்தி அடைய முடியுமா?
பதில் :
ல சந் | |||
கே |
1.1.1980
மாலை
05.05
நாமக்கல்
|
||
சுக் | கு செ ரா | ||
பு சூ | சனி |
ஜாதகத்தில் லக்னம், ராசி இரண்டும் குரு, சனி, கேது ஆகியவற்றின் சுபத்துவ பார்வை, இணைவு, அமர்வு போன்ற தொடர்பில் இருந்து குரு, சனி, ராகு, கேது தசைகளும் நடக்குமாயின் அவருக்கு இது போன்று சித்தர்களின் மேல் ஈடுபாடு, பிரம்மத்தைப் பற்றி அறியும் ஆர்வம், தவம், தியானம், யோகா, கூடு விட்டு கூடு பாய்தல், முற்பிறவி-அடுத்தபிறவி பற்றிய ஆர்வங்கள், கர்மா பற்றிய நுண்ணுணர்வு போன்றவைகள் ஏற்படும். இதுபற்றி ஏற்கனவே “தெய்வ அருள் எப்போது கிடைக்கும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இணையத்தில் தேடுங்கள். கிடைக்கும்.
உங்கள் ஜாதகத்தில் லக்னம், ராசி இரண்டும் ஒன்றாகி, பவுர்ணமிச் சந்திரனுக்கு எதிரே அமர்ந்த அதி சுப புதனின் நட்பு வீட்டில், குருவிற்கு நெருக்கமாக, அமர்ந்துள்ள சுபத்துவ சனி தனது பத்தாம் பார்வையால் லக்னம், ராசியைப் பார்க்கிறார். குருவுக்கு நிகரான பௌர்ணமி சந்திரனின் பார்வையில் இருக்கும் சூரியனும், குருவும் பரிவர்த்தனையான நிலையில், குரு மறைமுகமாக லக்னம், ராசி ஆகியவற்றை தொடர்பு கொள்கிறார். ஒன்பதாமிடமான ஆன்மீகத்தைக் குறிக்கும் சனியின் கும்ப வீட்டில் இருக்கும் கேதுவை குரு நேரடியாக பார்க்கிறார். இது ஒரு விதமான உயரிய ஆன்மீக நிலை.
தற்போது உங்களுக்கு சுபத்துவ சனி தசை நடந்து வருகிறது. எனவே உங்கள் எண்ணம் முழுவதும் முழுக்க முழுக்க ஆன்மீக ஈடுபாட்டில்தான் இருக்கும். ஆயினும் ஒருவர் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிவது போன்ற ஆன்மீகத்தின் மிக உயரிய உச்சநிலைக்கு செல்வதற்கு குரு,சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் லக்னம், ராசியோடு நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அந்த அமைப்பு உங்களுக்கு இல்லை. எனவே ஆன்மீக எண்ணங்களால் அலைக்கழிக்கப் பட மட்டும்தான் செய்வீர்களே தவிர, ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு தடை இருக்கிறது.
தற்போது நடக்கும் சனி தசை முழுவதும் இது போன்ற எண்ணங்கள் உங்களுக்கு மேலோங்கி இருக்கும். இந்த அமைப்பின்படி சித்தர்களின் தரிசனம், ஆசீர்வாதம் கிடைக்கும். ஆனால் நீங்களே முழுமை பெற்ற, பற்றற்ற, உலக வாழ்வைத் துறந்த சித்தராவதற்கு தடை இருக்கிறது. ஜாதகப்படி அடுத்த பிறவி உங்களுக்கு உண்டு.
சூரிய கலா, மன்னார், இலங்கை.
கேள்வி :
திருமணமாகி ஐந்து வருடம் ஆகிறது. எனக்கு எப்போது குழந்தை பலன் எப்போது? இங்குள்ள ஜோதிடர்கள் கூறியவாறு எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம். பார்க்காத தெய்வமில்லை, நேர்த்தி வைக்காத கோவிலும் இல்லை. குழந்தை இருக்கா இல்லையா என்பதை கூறுங்கள்.
பதில் :
சந் | ரா | ||
சூ |
கணவன்
25.2.1982
இரவு
9.58
மன்னார்
|
||
பு சு | |||
கே | கு ல | செ சனி |
சு ரா | சந் குரு | ||
சூ |
மனைவி
21.2.1988
இரவு
11.23
மன்னார்
|
||
பு | |||
செ சனி | ல | கே |
கணவன், மனைவி இருவருக்குமே ஐந்தில் சூரியன் அமர்ந்து, ஐந்துக்குடைய சனி செவ்வாயுடன் இணைந்து பலவீனமாக இருப்பதால், பிள்ளைப் பலன் தாமதமாகிறது. கணவனுக்கு குருவின் வீட்டில் இருக்கும் கேதுவின் தசை நடப்பதாலும், மனைவிக்கு 2020ம் ஆண்டு சந்திர தசையில் குருவின் வீட்டில் இருக்கும் ராகு புத்தி நடக்க உள்ளதாலும் 2020ம் ஆண்டு கையில் குழந்தை இருக்கும். முதல் குழந்தை பெண் குழந்தை.
ஐயா, தாங்கள்தான் எப்போது என்னக்கு வேலை கிடைக்கும் என்று கூற வேண்டும். நான் மனம் முடிந்து வெளிநாட்டில் வசிக்கிறேன்.நான் வேலை செல்ல விசா வேண்டும் மற்றும் என் கணவருக்கு விருப்பம் இல்லை.என் கண்ணவு வேலை பார்த்து நல்ல பொசிஷனில் சொப்ட்வேரில் வர வேண்டும்.ஏழை பெண்களுக்கு என்னால் முடித்த கல்வி உதவி பண்ண வேண்டும் ஐயா. எப்போது வேலை கிடைக்கும் ஐயா அக்டோபர் 28;1988 11:45 pm சிவகாசி